Modi and Zelenskyy: போரை நிறுத்த அனைத்து உதவியையும் இந்தியா செய்யும்.. உக்ரைனுக்கு பிரதமர் மோடி உறுதி
டெல்லி: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார். அதில், உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்த அனைத்து உதவிகளையும் செய்வதாக மோடி வாக்குறுதியளித்திருக்கிறார்.
போரை முடிந்தவரை விரைவாகவும், அமைதியான முறையிலும் நிறுத்த வேண்டும் என்றும், உக்ரைன் உடனான உறவுகளை மேம்படுத்த இந்தியா உறுதியாக இருப்பதாகவும் மோடி கூறியிருக்கிறார்.

இந்த உரையாடல் குறித்த தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, "அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேசியதில் மகிழ்ச்சி. சமீபத்திய நிலவரங்கள் குறித்த அவரது கருத்துக்களை கேட்டறிந்தேன். இப்போரை விரைவாகவும் அமைதியாகவும் தீர்க்க வேண்டியதன் அவசியம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை நான் எடுத்துரைத்தேன். இது தொடர்பாக சாத்தியமான அனைத்து பங்களிப்புகளையும் செய்ய இந்தியா உறுதிபூண்டுள்ளது. அத்துடன், உக்ரைனுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் இந்தியா உறுதியாக உள்ளது" என்று கூறியிருக்கிறார்.
சமீபத்தில்தான் ரஷ்ய அதிபர் புதியனுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக உரையாடியிருந்தார். இந்த தொலைபேசி உரையாடலின் போது உக்கரை நிலவரம், உக்ரைன் தொடர்பான இதர விவரங்கள் குறித்து மோடிக்கு புதின் விளக்கி இருந்தார். மறுபுறம் போர் பற்றி இந்தியாவின் நிலைப்பாடு, அமைதியான முறையில் போர் முடிவடைய வேண்டும் என்பது குறித்து பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.
இப்படி இருக்கையில் உக்ரைன் அதிபருடன் மோடி பேசியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது. சர்வதேச அளவில் அமெரிக்க ஆதரவு நாடுகள், ரஷ்ய ஆதரவு நாடுகள் என இரு தரப்பாக உலக நாடுகள் பிரிந்து இருக்கின்றன. இதில் இந்தியா, அமெரிக்க தரப்பாகவே ஆரம்பத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது.
இப்படி இருக்கையில் மேற்கு நாடுகளுக்கும்-கிழக்கு நாடுகளுக்கும், அதாவது அமெரிக்க ஆதரவு நாடுகளுக்கும், ரஷ்ய ஆதரவு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த இந்தியா தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால் இந்த நல்லுறவு முயற்சி என்பது எதிர்பார்த்த அளவுக்கு பலனை கொடுக்காது என அரசியல் விமர்சகர்கள் எச்சரித்து வருகின்றனர். அவர்கள் எச்சரித்ததை போலவே, இந்தியா மீது அமெரிக்கா 50% வரியை போட்டு லாக் செய்துவிட்டது.
அமெரிக்காவுக்கு சப்போர்ட் செய்து தான் போரை நிறுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தாலும் கூட அமெரிக்கா இதையெல்லாம் கண்டுக்காமல் 50% அளவுக்கு வரியை போட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் உக்ரைனிடம் பிரதமர் நரேந்திர மோடி பேசி இருப்பது சர்வதேச அரசியலில் கவனம் பெற்று இருக்கிறது.
-
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications