கொரோனாவை கட்டுப்படுத்த மோடி அரசு அதிரடி.. கையில் எடுத்த 'பிளான் 4'
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு நான்கு வழிமுறைகளை மோடி அரசு கையில் எடுத்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது. படிப்படியாக அந்த நடவடிக்கைகளை இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அரசு.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் மோடி அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தற்காப்பு நடவடிக்கை பற்றி விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சார்க் நாடுகள் ஆலோசனை கூட்டத்தை இந்தியா நடத்தியது, அதில், கொரோனா வைரசுக்கு எதிராக எந்த மாதிரி திட்டங்களை கையாளுவது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆலோசனையில் பங்கெடுத்தார்.

சார்க் மீட்டிங்
உலகத்துக்கே, சார்க் நாடுகள் இந்த விஷயத்தில் முன்மாதிரியாக மாற முடியும் என்று அப்போது அவர் வலியுறுத்தினார். மேலும் மக்கள் பீதி அடையத் தேவையில்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டால் போதும் என்று சமூக வலைத்தளங்கள் வாயிலாக அவர் மக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

பயணம்
அத்தியாவசியமற்ற பயணங்களை மற்றும் பெருமளவுக்கு கூட கூடிய நிகழ்வுகளை தவிர்த்து விட வேண்டும் என்று அவர் மக்களுக்கு அறிவுரை வழங்கினார். அனைத்து மாநிலங்கள் மற்றும் அனைத்து துறை அமைச்சர்களும் இணைந்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் உறுதி அளித்தார்.

மருந்துகள்
நாடு முழுக்க, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது அரசு. மக்களுக்கு தேவையான மருந்துகள் இருப்பில் இருக்கச் செய்ய போதிய நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. இதனால்தான், ஜன் அவுஷதி கடைக்காரர்களுடன் மோடி ஆலோசனை நடத்தியிருந்தார். அது முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆலோசனை
ஜன் அவுஷதி பயனாளிகள் மற்றும் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் மோடி. 1) முன்கூட்டியே தடுப்பு சுகாதார நடவடிக்கை, 2) குறைந்த கட்டணத்தில் சிகிச்சை, 3) அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் சிகிச்சை, 4) மிஷன் மோட் திட்டங்கள் ஆகியவை இந்த நான்கு அம்சங்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications