ஸ்பீக் அப் பார் ஜாப்ஸ்... மக்கள் இணைய வேண்டும்... ராகுல் காந்தி அழைப்பு!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்று காலை பத்து மணி முதல் பத்து மணி நேரத்துக்கு காங்கிரஸ் கட்சியால் தொடங்கப்பட்டு இருக்கும் ''ஸ்பீக் அப் பார் ஜாப்ஸ்'' என்ற குரலுடன் மக்கள் அனைவரும் இணைய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில், ''நாட்டில் வேலை வாய்ப்பு இழப்புக்கு காரணம் மத்திய அரசுதான். தங்களுடைய குரலை கேட்குமாறு மோடி அரசை மக்கள் வலியுறுத்த வேண்டும். இதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் துவங்கப்பட்டு இருக்கும் ''ஸ்பீக் அப் பார் ஜாப்ஸ்' என்ற திட்டத்துக்கு மக்கள் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். இன்று காலை பத்து மணிக்கு துவங்கி தொடர்ந்து பத்து மணி நேரத்துக்கு மக்கள் தங்களது ஆதரவை தெரிவிக்கலாம்.

Modi Govt have caused the loss of crores of jobs and a historic fall in GDP Rahul Gandhi

மோடி அரசின் தவறான கொள்கைகளால் கோடிக்கணக்கில் வேலை இழந்து, ஜிடிபியில் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. இளைஞர்களின் எதிர்காலம் நசுக்கப்பட்டுள்ளது. நமது குரலை கேட்குமாறு மோடி அரசை செய்ய வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா தனது பதிவில், ''ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதாக தெரிவித்து இருந்தனர். ஆனால், தற்போது ஆறு ஆண்டுகளில் மொத்தமாக 14 கோடி பேரின் வேலை வாய்ப்பை பறித்துள்ளனர். இளைஞர்கள் தற்போது மீண்டு, பதில் கேட்டு வருகின்றனர். நாட்டின் கொள்கைகளை ஒன்றன் பின் ஒன்றாக அழித்து, மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டுள்ளது பாஜக அரசு'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+