Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபரேஷன் பிரஹார் மற்றும் ஆபரேஷன் ஆக்டோபஸ்.. இந்தியாவிற்கு உள்ளேயே.. மத்திய அரசின் சீக்ரெட் ஆக்சன்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நக்சலைட்டுக்கு எதிரான இந்தியாவின் போர் புதியதல்ல. பல ஆண்டுகளாக, நாட்டின் பெரும்பகுதிகள் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தின் நிழலில் கட்டுப்பட்டு தவித்து வந்தன. ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பொதுப் பிரதிநிதிகள் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர். கண்ணிவெடிகள் தாக்குதல், பதுங்கியிருந்து தாக்குதல்கள் உள்ளிட்ட பல தாக்குதல்களுக்கு உள்ளாகி கொடூரமாக பலியாகின்றனர்.

பல அரசாங்கங்கள் இடதுசாரி தீவிரவாதத்தை (LWE) ஒரு கடுமையான உள்நாட்டு அச்சுறுத்தலாக ஒப்புக்கொண்டாலும் பாஜக மட்டுமே இதில் தீர்க்கமான முடிவுகளை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான UPA-வின் அணுகுமுறையை பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக தலைமையிலான NDA-வின் அணுகுமுறையுடன் ஒப்பிடும் போது பல வேறுபாடுகள் தெளிவாக தெரிகின்றன.

naxal bjp

2004 முதல் 2014 வரை, பிரதமர் மன்மோகன் சிங்கின் கீழ், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் நக்சல் பிரச்சினையை எதிர்கொண்டு வந்தது. நக்ஸல்களை ஒடுக்க நாடு முழுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் (IAP) மற்றும் மிகவும் ஆபரேஷன் கிரீன் ஹன்ட் ஆகியவை தொடங்கப்பட்டது.

வளர்ச்சி + பாதுகாப்பு இரண்டையும் நோக்கமாகக் கொண்டு இந்த செயல்திட்டம் தொடங்கப்பட்டது. இவை நல்ல நோக்கம் மற்றும் முயற்சியாக இருந்தாலும் அதை செயல்படுத்துவதில் அப்போதைய அரசு கடுமையாக திணறியது.

யுபிஏ பெரும்பாலும் தற்காப்பு நிலைப்பாட்டை மட்டுமே எடுத்தது. அதாவது நக்சல்களை எதிர்கொள்ள தற்காப்பு நிலைப்பாட்டை எடுத்ததே தவிர, அவர்களை அப்புறப்படுத்தும் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவில்லை. சமூக-பொருளாதார திட்டங்கள் போன்ற மென்மையான எதிர்வினைகளை மட்டுமே இந்தியா நம்பி இருந்தது. நக்சல்களின் ஆயுதங்களுக்கு ஆயுதத்தால் பதில் அளிக்க அப்போதைய காங்கிரஸ் அரசு நினைக்கவில்லை.

அதேபோல் அப்போதைய காங்கிரஸ் அரசிடம் போதிய உள்துறை, உளவுத்துறை அறிவு, துல்லியம் இல்லை. மத்தியப் படைகளுக்கும் மாநிலப் பிரிவுகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு சீரற்றதாகவே இருந்தது. அதே வேளையில், வன்முறையை ஒருபோதும் கைவிடாத கிளர்ச்சியாளர்களிடம் போய் அப்போதைய காங்கிரஸ் அரசு பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இதன் விளைவாக, மத்திய மற்றும் கிழக்கு இந்தியா முழுவதும் பரந்த பகுதிகளில் நக்சல் இயக்கம் தனது பிடியைத் தக்க வைத்துக் கொண்டது, அதிக அளவிலான வன்முறை மற்றும் பொதுமக்கள் உயிரிழப்புகள் யுபிஏவின் இறுதி ஆண்டுகளில் நடந்தன..

ஆனால் 2014 ஆம் ஆண்டில் அது மாறியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் இந்தப் போராட்டத்தில் தெளிவு, உறுதிப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பைக் கொண்டு வந்தது. பாஜகவின் அணுகுமுறை உறுதியானது: ஆயுதமேந்திய கிளர்ச்சியை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது, ஆயுதங்கள் ஒப்படைக்கப்படும் வரை பேச்சுவார்த்தைகள் இல்லை, தேசிய பாதுகாப்பை அச்சுறுத்துபவர்களை ஒரு கை பார்ப்பது என்று பாஜக இதில் உறுதியாக இருந்தது.

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலைமையில், ஆபரேஷன் பிரஹார் மற்றும் ஆபரேஷன் ஆக்டோபஸ் போன்ற மிகவும் ஒருங்கிணைந்த மற்றும் உளவுத்துறை சார்ந்த நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டது. செயற்கைக்கோள் கண்காணிப்பு, ட்ரோன் கண்காணிப்பு மற்றும் மனித உளவுத்துறை ஆகியவை இதற்காக களமிறக்கப்பட்டது. இதனால் அடுத்தடுத்து நக்சல்கள் அகப்பட்டனர் அல்லது அப்புறப்படுத்தப்பட்டனர்.

ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்த உத்தி துப்பாக்கியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. வளர்ச்சியும் ஒரு ஆயுதம் என்பதை அது புரிந்து கொண்டது. அதாவது ஆயுதத்தை மட்டும் நம்பி இல்லாமல் நக்சல் பிராந்தியங்களில் வளர்ச்சியை கொண்டு வந்து மக்களை முன்னேற்றும் பணிகளை செய்தது.

பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (PMGSY) மற்றும் பாரத்மாலா பரியோஜனா போன்ற திட்டங்கள் மூலம், ஒரு காலத்தில் நக்சல்களால் தனிமைப்படுத்தப்பட்டு சுரண்டப்பட்ட தொலைதூர பழங்குடிப் பகுதிகள் இப்போது நாட்டின் பிற பகுதிகளுடன் சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகள் சந்தைகளையும் பள்ளிகளையும் நெருக்கமாகக் கொண்டுவருவது மட்டுமல்லாமல்.. நக்சல் ஆதிக்கத்தை உடைத்தது. நூற்றுக்கணக்கான முன்னாள் நக்சல்கள் தொழில் பயிற்சி, நிதி ஊக்கத்தொகை மற்றும் மறுவாழ்வு பெற்று தீவிரவாதத்தை கைவிட தொடங்கினர்.

அசத்தலான முடிவுகள்: வன்முறை குறைந்தது

உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, நக்சல் தொடர்பான வன்முறை வியக்கத்தக்க வகையில் 77% குறைந்துள்ளது. மேலும் UPA ஆட்சியின் உச்சத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் இறப்புகள் பாஜக ஆட்சி காலத்தில் 85% குறைந்துள்ளன. இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல - உண்மையான உயிர்கள் காப்பாற்றப்பட்ட லிஸ்ட் இது. பல குடும்பங்கள் நக்சல் வன்முறையில் இருந்து காப்பாற்றப்பட்டன.


ஆபரேஷன் காகர்: அரசின் அதிரடி நடவடிக்கை

சத்தீஸ்கர்-தெலுங்கானா எல்லையில் உள்ள அடர்ந்த கர்ரேகுட்டலு காட்டில் நடைபெற்று வரும் ஆபரேஷன் காகர. மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்கு எதிரான இந்தியாவின் அதிரடி நிலைப்பாட்டிற்கு ஒரு சான்றாக இது தொடங்கப்பட்டு உள்ளது. மோடி அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் ஆதரவுடன், இடதுசாரி தீவிரவாதத்தின் கடைசி கோட்டைகளில் ஒன்றை அகற்ற 1,00,000 க்கும் மேற்பட்ட துணை ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை, மூன்று பெண் மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூட்டில் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் இதுவரை கிட்டத்தட்ட 44 பேர் சரணடைந்துள்ளனர். பலர் கிளர்ச்சியை விட மறுவாழ்வைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இருப்பினும், மூத்த மாவோயிஸ்ட் தலைவர்கள் பல இன்னும் சரண் அடையவில்லை. இதனால் பாதுகாப்புப் படைகள் இப்பகுதியில் தங்கள் பிடியை இறுக்குவதற்கு முன்பு அவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கவலையை எழுப்பியுள்ளது.

மிக கடுமையான நிலப்பரப்பு மற்றும் கிட்டத்தட்ட 1,000 ஆயுதமேந்திய நக்சல்களின் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், நமது படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. முக்கியமான மலை உச்சிகளைப் பாதுகாத்து, தேசியக் கொடி பெருமையுடன் ஏற்றி, ட்ரோன் கண்காணிப்பு மற்றும் செயற்கைக்கோள் உளவுத்துறை மூலம் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய அரசு அதன் நிலத்தின் ஒவ்வொரு மூலையும் கிளர்ச்சியின் நிழலில் இருந்து விடுபடும் வரை ஓய்வெடுக்காது என்பதற்கான தெளிவான அறிவிப்பு இது. இந்த கடுமையான நிலைப்பாடு, பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களைக் கொன்ற மாவோயிஸ்ட் வன்முறைக்கு எதிரான தரமான பதிலடியாக பார்க்கப்படுகிறது.

இது பாஜகவின் நீண்டகால கொள்கையை பிரதிபலிக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள சில நக்சல் ஆர்வலர்கள் இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு அழைப்பு விடுத்தாலும், நிலையான அமைதி ஒழுங்கை மீட்டெடுத்த பின்னரே இதை நிறுத்துவோம் என்பதில் மத்திய அரசாங்கம் உறுதியாக உள்ளது.

மேலும் மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்ற கேள்விக்கே இடமில்லை. வன்முறையைத் தேர்ந்தெடுப்பவர்கள், துப்பாக்கிகளை ஏந்துபவர்கள் மற்றும் அப்பாவி மக்களைக் கொல்பவர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்பதை மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் தெளிவுபடுத்தியுள்ளார்.

காங்கிரஸ் & பிஆர்எஸ்: எடுத்த நிலைப்பாடு

பாஜக தலைமையிலான படைகள் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தை எடுத்துச்செல்லும் அதே வேளையில், காங்கிரஸ் & பிஆர்எஸ் இதை எதிர்க்கின்றனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சொல்கின்றன. இந்த நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று சொல்கின்றன.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் கே.சி.ஆரின் மகள் கே. கவிதா போன்ற தலைவர்கள் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடத்த பரிந்துரைத்துள்ளனர், இது ஒரு காலத்தில் யுபிஏ முன்னெடுத்த அதே தோல்வியுற்ற உத்தி ஆகும். இதை மீண்டும் செய்தால் பலன் அளிக்காது. மோசமான விஷயம் என்னவென்றால், தெலுங்கானா காங்கிரஸ் அரசாங்கம், ஆபரேஷன் காகரின் முக்கிய கட்டங்களின் போது உயர்மட்ட மாவோயிஸ்ட் செயல்பாட்டாளர்கள் எல்லைகளைத் தாண்டிச் செல்ல அனுமதித்திருக்கலாம் என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. தேசியப் பாதுகாப்பை ஆதரிப்பதற்குப் பதிலாக, அவர்கள் அரசியல் ரீதியாக சிலரை திருப்திப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

தேசிய பாதுகாப்பு குறித்த பாஜகவின் உறுதியான நிலைப்பாடு

மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் கூறியது போல பாஜக ஒருபோதும் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களுடனும், அப்பாவி மக்களைக் கொலை செய்பவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தாது. பொதுமக்களின் சடலங்கள் மேல்அமைதியைக் கட்டியெழுப்ப முடியாது.

தெலுங்கு மாநிலங்கள் ஒரு காலத்தில் மாவோயிஸ்ட் ஆதிக்கத்தால் பிடிபட்டிருந்தன, மக்கள் போர் குழு போன்ற கிளர்ச்சிக் குழுக்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தன. இந்தக் குழுக்களை பின்னுக்குத் தள்ள பல வருட கால முயற்சியும் அரசியல் மாற்றமும் தேவைப்பட்டது.

ஒரு காலத்தில் ஒரு புதிய ரெட் காரிடாரின் மையமாக மாற அஞ்சிய தெலுங்கானா, தொடர்ச்சியான அழுத்தத்தின் காரணமாக இப்போது பெரிய கிளர்ச்சி நடவடிக்கைகளிலிருந்து விடுபட்டுள்ளது. 2021 வாக்கில், மாவோயிஸ்ட் கூட்டங்கள் அரிதாகவே நடக்கின்றன. ஒரே ஆண்டில் 250 க்கும் மேற்பட்ட நக்சல்கள் சரணடைந்து உள்ளனர்.

UPA தயங்கிய இடத்தில், NDA அதிரடியாக செயல்பட்டது. பாஜக பாதுகாப்பான, அமைதியான மற்றும் நக்சல் இல்லாத ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்கி வருகிறது. 2026 ஆம் ஆண்டுக்குள் நக்சலிசத்தை ஒழிக்க வேண்டும் என்ற தெளிவான இலக்குடன் சென்று கொண்டு இருக்கிறது. இந்தியா இறுதியாக தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரு அரசாங்கத்தைக் கொண்டுள்ளது இதன் மூலம் தெளிவாகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+