சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமனம்... முடிவுக்கு வந்தது சர்ச்சை
டெல்லி: சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமிக்கப்பட்டு உள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான குழு அவரை நியமித்துள்ளது.
சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியதையடுத்து, இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. சிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வர ராவை தற்காலிக சிபிஐ இயக்குநராகவும் மத்திய அரசு நியமித்தது.

அதை எதிர்த்து, சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவு செல்லாது, அலோக் வர்மா மீண்டும் இயக்குநர் பதவியைத் தொடரலாம் என்றும கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டது.
மேலும், அலோக் வர்மா குறித்த இறுதி முடிவைப் பிரதமர் தலைமையிலான உயர்நிலைக் குழு முடிவு செய்யும் என்று தெரிவித்திருந்தது. அதையடுத்து அலோக் வர்மாவை பதவி நீக்கம் செய்து பிரதமர் மோடி தலைமையிலான உயர் நிலைக்குழு அதிரடியாக அறிவித்து சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் பொதுநல மனு தாக்கல் செய்தார்., சிபிஐ இயக்குநர் பதவி என்பது முக்கியமானது என்பதால் நீண்ட நாட்களுக்கு இடைக்கால இயக்குநரை நியமிப்பது சரியாகாது. எனவே, உடனடியாக முழுநேர இயக்குநரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, பிரதமர் மோடியின் தலைமையில் சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநரை தேர்வு செய்ய இருமுறை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. ஆனால் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.
இந் நிலையில், பிரதமர் மோடியின் தலைமையில் டெல்லியில் மீண்டும் உயர் மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் இறுதியான முடிவு எடுக்கப்பட்டு, சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷிகுமார் சுக்லா நியமிக்கப்பட்டு உள்ளார்.

அலோக் வர்மாவை நீக்கியதை தொடர்ந்து ரிஷிகுமார் சுக்லா, சிபிஐயின் புதிய இயக்குநராக அறிவிக்கப் பட்டுள்ளார். அவர் 2 ஆண்டுகள் இந்த பணியில் இருப்பார். ரிஷிகுமார் சுக்லா, மத்திய பிரதேசத்தில் டிஜிபியாக அவர் பணியாற்றியவர், 1983ம் ஆண்டு ஐபிஎஸ் பதவிக்கு தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications