திருவள்ளுவர் சிந்தனை வேற லெவல்... இளைஞர்களே மறக்காம திருக்குறள் படிங்க... பிரதமர் தமிழில் டுவிட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தி உள்ளார்.

 Modi pays tributes to Tamil poet Thiruvalluvar

ஆண்டுதோறும் தை மாதத்தின் இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கல் அன்று தெய்வபுலவர் திருவள்ளுவரின் நாளாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் திருவள்ளுவரின் பெருமைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் திருவள்ளுவர் தினத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமிழில் பதிவிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு தலை வணங்குகிறேன். திருவள்ளுவரின் சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன.

 Modi pays tributes to Tamil poet Thiruvalluvar

அவரது லட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மோடி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+