பண மோசடி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் நாளை ஆஜராக அமலாக்கத்துறை 6-வது முறையாக சம்மன்!
டெல்லி: சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 6-வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுரங்க உரிமைகள் விவகாரத்தில் மிகப் பெரிய ஊழல், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது என்பது அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு. இது தொடர்பான வழக்குகளில் ஜார்க்கண்ட் ஐஏஎஸ் அதிகாரியான சாவி ராஜன் உள்ளிட்ட 14 பேர் ஏற்கனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டும் உள்ளனர். இந்த வழக்கில் ஹேமந்த் சோரனும் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே மற்றொரு சுரங்க முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் ஹேமந்த் சோரன், ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை அனுப்பும் 6-வது சம்மன் இது.
அமலாக்கத்துறை விசாரணகளில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் நாளைய விசாரணைக்கு ஹேமந்த் சோரன் ஆஜராவாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications