குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட டெல்லியில் இளைஞர்.. கடும் உடல் வலியால் அவதி - ஆனால்?
டெல்லி: குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட டெல்லியை சேர்ந்த இளைஞர் உடல் வலியால் அவதிப்பட்டு வருகிறார்.
குரங்கம்மை நோய் உலகம் முழுவதும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவிலும் கடந்த சில மாதங்களாக குரங்கம்மை தொற்று குறித்து மத்திய மற்றும் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தன.

கேரளாவில் பாதிப்பு
இதுவரை இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், கடந்த 14 ஆம் தேதி இந்தியாவிலேயே முதல் முறையாக கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டு உள்ளதை தொடர்ந்து அம்மாநிலத்துக்கு மத்திய சுகாதாரத்துறை குழு விரைந்தது.
Recommended Video

மாநிலங்களுக்கு கடிதம்
இதனை தொடர்ந்து குரங்கு அம்மை தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் வழிகாட்டு நெறிகளுடன் கூடிய கடிதத்தை மத்திய சுகாதாரத்துறை அனுப்பியது. அதில், குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்ய வேண்டும். குரங்கு அம்மை பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், நோய்க்கான அறிகுறி இருந்தால் இணை நோய் இருப்பவர்கள் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

டெல்லியில் ஒருவருக்கு பாதிப்பு
குரங்கு அம்மை நோய்க்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கான மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. 31 வயது இளைஞருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் டெல்லி மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

உடல் வலி
வெளிநாட்டு தொடர்புகள் இல்லாத இவருடன் தொடர்பில் இருந்த 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட நபருக்கு இதுவரை எந்தவிதமாக அறிகுறியும் தென்படவில்லை. குறிப்பாக காய்ச்சல், தோல் பிரச்சனை, தடிப்புகள் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரம் அவர் கடுமையான உடல் வலியால் அவதிப்பட்டு வருவதாகவும், தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications