அடடா காட்டில் வசிக்கும் இந்த குரங்குக்கு இருக்கும் அக்கறை கூட நமக்கு இல்லையே!- வைரல் வீடியோ
டெல்லி: தலையில் கட்டும் துணியை ஒரு குரங்கு மாஸ்க் போல் முகத்தை சுற்றி அணிந்து கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.
கொரோனா நேரத்தில் அதிலிருந்து மீள்வதற்காக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை மாஸ்க்கும், சமூக இடைவெளியும்தான் பாதுகாப்பு கேடயம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.
இதனால் என் 95 மாஸ்க் முதல் துணியில் மறுமுறை பயன்படுத்தப்படும் மாஸ்க் வரை விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. எங்குச் சென்றாலும் மரத்தடியில் கலர் கலராக மாஸ்க்குளை தொங்கவிட்டபடி விற்பனை நடைபெறுகிறது.

முக்கியத்துவம்
இந்த நிலையில் மாஸ்க்கின் முக்கியத்துவத்தை இன்று வரை சிலர் உணரவே இல்லை. அண்மையில் நடந்த சம்பவங்களை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. ஆம் புதுவையில் மாஸ்க் போடாதவர்களை போலீஸார் பிடித்து அபராதம் வசூலித்து வந்தனர். அப்போது அவ்வழியாக ஒரு நபர் மாஸ்க் அணியாமல் வந்தார்.

சிக்கன் வாங்கிய கடை ரசீது
அப்போது போலீஸார் பிடிப்பதை பார்த்துவிட்டு அவர் சிக்கன் வாங்கிய கடையின் ரசீதை வாயில் மாஸ்க் போல் பிடித்தபடி வந்தார். போலீஸார் மடக்கினர். அபராதம் வசூலித்து கடுமையாக எச்சரித்தனர். அது போல் போலீஸார் நடவடிக்கைக்கு பயந்து கொண்டு வேலூரில் ஒரு நபர் செய்த காரியம் முட்டாள்தனத்தின் உச்சமாகும்.

மனிதர்கள்
வேலூரில் கீழே கிடந்த மாஸ்க்கை அணிந்ததால் அந்த மாஸ்க் மூலம் அவருடைய குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனாவை பரவ வைத்துவிட்டார். இதுபோல் மனிதர்கள் மாஸ்க் விஷயத்தில் இப்படி விளையாடி வருகிறார்கள். ஆனால் ஒரு காட்டில் வாழும் குரங்கு மாஸ்கின் முக்கியத்துவத்தை விளையாட்டுத்தனமாக செய்கிறது.
|
சுசாந்தா நந்தா
கீழே கிடந்த ஒரு துணியை எடுத்து முகத்தில் போட்டுக் கொண்டு சுற்றி வருகிறது. இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானது. ட்விட்டர்வாசிகள் சாலையில் இருக்கும் துணியை எடுத்து மாஸ்க்காக குரங்கு அணிவதை கொண்டாடி வருகிறார்கள். இது வரை இந்த வீடியோ வைரலாகி வருகிறது. சிலர் வந்தபின் அவதிப்படுவதை விட வருமுன் காப்பதே சரி என கருத்து பதிவிட்டுள்ளார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications