"லாக்டவுன்!" வர வாய்ப்பு இருக்கா? அதிகரிக்கும் மங்கி பாக்ஸ்.. மத்திய அரசு அவசர ஆலோசனை! ஏன் முக்கியம்
டெல்லி: இந்தியாவில் மங்கி பாக்ஸ் மெல்லப் பரவ தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறது.
Recommended Video
இந்தியாவில் ஒரு புறம் கொரோனா குறைந்து வருவது நல்ல செய்தி தான். ஆனால், அதேநேரம் மறுபுறம் மங்கி பாக்ஸ் கேஸ்கள் மெல்ல அதிகரிக்கத் தொடங்குவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்பிரிக்காவில் மட்டுமே பொதுவாக இருக்கும் மங்கி பாக்ஸ் இப்போது உலகின் பல நாடுகளுக்குப் பரவி வருகிறது. இது மற்றொரு பெருந்தொற்றுக்கு வழிவகுக்குமோ என்ற அச்சமும் ஏற்பட்டு உள்ளது.

இந்தியா
இந்தியாவில் இதுவரை 9 பேருக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் தான். அதேநேரம் கேரளாவில் ஒருவர் மங்கி பாக்ஸ் காரணமாக உயிரிழந்து இருந்தார். மங்கி பாக்ஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த நோயில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி, செய்ய வேண்டியவை என்ன செய்யக் கூடாதவை என்ன என்பதை விளக்கி மத்திய அரசும் கூட சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

ஆய்வுக் கூட்டம்
இந்தச் சூழலில் மங்கி பாக்ஸ் பாதிப்பு குறித்து விவாதிக்க மத்திய அரசு இன்று உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறது. சுகாதார அமைச்சகத்தின் ஒரு பிரிவான ஹெல்த் சர்வீசஸ் (DGHS) பொது இயக்குநரகம் இந்த மங்கி பாக்ஸ் ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறது. அவசர மருத்துவ இயக்குநர் டாக்டர் எல் ஸ்வஸ்திசரண் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

தனிமை
மத்திய அரசு ஏற்கனவே வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள நிலையில், அதை மாற்றுவது தொடர்பாகவும் இதில் ஆலோசிக்கப்பட உள்ளது. தற்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி, 21 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் நபருக்குக் கடுமையான சொறி மற்றும் கொப்புளங்கள், காய்ச்சல், தலைவலி, உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் மங்கி பாக்ஸ் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இரண்டு வகை
இது தொடர்பாக புனேவின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி மூத்த ஆய்வாளர் டாக்டர் பிரக்யா யாதவ் கூறுகையில், "மத்திய ஆப்பிரிக்க (காங்கோ பேசின்) கிளேட் மற்றும் மேற்கு ஆப்பிரிக்க கிளேட் என இரு வகையான மங்கி பாக்ஸ் உள்ளது. இவை இரண்டு தனித்த மரபணு பிரிவுகளைக் கொண்டதாகும். இப்போது பரவும் மங்கி பாக்ஸ் பாதிப்பு மேற்கு ஆப்பிரிக்க வகையால் ஏற்பட்டது. இது காங்கோ வகையை விட கடுமையானது இல்லை. இந்தியாவிலும் இதுதான் கண்டறியப்பட்டு உள்ளது" என்றார்.

எப்படிப் பரவும்
மங்கி பாக்ஸ் வைரஸ் கோவிட்-19 போல புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை. இதனால் மங்கி பாக்ஸ் பண்புகள் குறித்து நமக்கு நிறைய விஷயங்கள் ஏற்கனவே தெரியும். மங்கி பாக்ஸ் பாதிப்பு கொரோனா வைரஸை போலக் காற்றில் பரவாது. நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே மங்கி பாக்ஸ் ஏற்படும். பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து வெளிப்படும் நீர் மற்றவர்கள் உடலில் புகும்போது மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்படும்.

ஊரடங்கு வருமோ
சர்வதேச அளவில் மங்கி பாக்ஸ் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் இதுவரை 9 பேருக்கு மங்கி பாக்ஸ் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே, கொரோனா வைரஸ் பரவிய சமயத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது போல, இப்போதும் எங்கு ஊரடங்கு அறிவிக்கப்படுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவர் ஃபஹீம் யூனுஸ் விளக்கம் அளித்துள்ளார்.

அச்சம் வேண்டாம்
மங்கி பாக்ஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்ட வாய்ப்புகளே இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மங்கி பாக்ஸ் பாதிப்பு காற்றின் மூலம் வேகமாகப் பரவாது. நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே பரவும் என்பதால், மங்கி பாக்ஸ் நோயாளிகள் மற்றும் அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப்படுத்தினாலே போதும் என்றே மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications