வரலாற்று பாடப்புத்தகங்களில் சித்தாந்தத்தை புகுத்துவதா?.. நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு, அறிஞர்கள் கடிதம்
டெல்லி: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(என்.சி.இ.ஆர்.டி) வரலாற்று திட்டத்தில் சித்தாந்தத்தை புகுத்தக் கூடாது என்று 100-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு வரலாற்று அறிஞர்கள் கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(என்.சி.இ.ஆர்.டி) பள்ளிகளின் வரலாற்று பாடத்திட்டங்களில் பல்வேறு திருத்தங்களை செய்துள்ளது. உத்தர பிரதேச பாடத்திட்டத்தில் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவரும் பிரபல கல்வியாளருமான ராதாகிருஷ்ணன் ஆகியோரின் படைப்புகள் நீக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இவற்றைத் தவிர முக்கிய வரலாற்று தலைவர்கள். படைப்பாளிகளின் பாடப்பகுதிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் சித்தாந்த கருத்துக்கள், சில வரலாற்று திணிப்புகளும் புகுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன..

என்.சி.இ.ஆர்.டி
இந்த நிலையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(என்.சி.இ.ஆர்.டி) வரலாற்று திட்டத்தில் சித்தாந்தத்தை புகுத்தக் கூடாது என்று 100-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு வரலாற்று அறிஞர்கள் கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். பாடத்திட்டங்களில் திருத்தம் செய்யப்படுவது குறித்து அவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

100-க்கும் மேற்பட்ட அறிஞர்கள் கடிதம்
ரோமிலா தாப்பர், முகுல் கேசவன் மற்றும் டெல்லி பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம், டொராண்டோ பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு எழுதிய கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர் . வரலாற்றுக்கு மாறான உண்மைகள் பற்றிய குறிப்புகள் மற்றும் இந்திய வரலாற்றின் அனைத்து காலங்களுக்கும் சமமான அல்லது விகிதாசார குறிப்புகளை உறுதி செய்தல் போன்றவை குறித்து அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது..

குறிப்பிட்ட சித்தாந்தம்
ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் பாடநூல் திருத்தம் செய்வதற்கான பயிற்சியை மேற்கொள்ள முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர். சம்பந்தப்பட்ட வரலாற்றாசிரியர்கள் பாடப்புத்தகங்களில் திருத்தங்கள் அனைவரின் ஒருமித்த கருத்துடன் ஒத்ததாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

சிதைவுகள் உள்ளன
வரலாற்று அறிஞர்கள், நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு இந்த கடிதத்தை ஜூலை 15 ம் தேதி அனுப்பியதாக தெரிகிறது. என்.சி.இ.ஆர்.டி பள்ளி வரலாற்று பாடப்புத்தகங்கள்' வரலாற்றுக்கு மாறான உண்மைகளையும் சிதைவுகளையும் 'கொண்டுள்ளன என்று பரவலாக பரப்பப்படும் குற்றச்சாட்டுகளை தெரிவித்து விளக்கமாக எழுதி உள்ளனர்.












Click it and Unblock the Notifications