நாடாளுமன்ற அத்தியாயத்தில் புதிய நடைமுறை... ஆப்பில் 'பிரசென்ட்' போட்ட எம்பிக்கள்!!
டெல்லி: இந்திய வரலாற்றில் முதன் முறையாக இன்று நாடாளுமன்றத்திற்கு வந்த எம்பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களுக்கு என வழங்கப்பட்டு இருந்த வருகைப் பதிவேடுக்கான ஆப்பில் பிரசென்ட் என்று பதிவு செய்தனர். கொரோனா தொற்று அச்சம் காரணமாக அவைக்கு வரும் எம்பிக்கள் இனி இந்த ஆப்பில் பதிவு செய்தால் போதுமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் துவங்கியது. கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் நிலையில் இன்று கூடிய நாடாளுமன்ற கூட்டத்திற்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு இருந்தது. உறுப்பினர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வந்து இருந்தனர். பலர் கையுறையும் அணிந்து இருந்தனர்.

அவைக்கு வருபவர்களுக்கு என்று சிறப்பு ஆப் உருவாக்கப்பட்டு இருந்தது. அதாவது உறுப்பினர்கள் அவைக்கு வந்தததை குறிக்கும் வகையில் வழங்கப்பட்டு இருக்கும் சிறப்பு ஆப் வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
கொரோனா தொற்று காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முறை பயோமெட்ரிக் முறை கைவிடப்பட்டது. இந்த முறையில் தொற்று பரவ வாய்ப்பு இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அவைக்கு வந்த உறுப்பினர்கள் பொறுப்பாக அவைக்கு வெளியே நின்று ஆப்பில் பதிவு செய்துவிட்டு சென்றனர். இந்த முறை முதன் முறையாக நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப் உறுப்பினர்கள் இடையே வரவேற்பும் பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக ஒவ்வொரு உறுப்பினருக்கும் மாஸ்க், முகத்தை மறைக்கும் ஷீல்ட் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications