வரும் காலத்தில் எம்பிக்களின் எண்ணிக்கை உயரப் போகிறது.. பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்
டெல்லி: இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைப் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார், அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர உள்ளது குறித்து அவர் முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
டெல்லியில் இத்தனை காலம் இயங்கி வந்த நமது நாடாளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. அது தற்கால நவீன பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டிருக்கவில்லை என்பது நீண்ட காலம் இருந்த புகாராக இருந்தது.

மேலும், 96 ஆண்டுகள் பழமையான இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடம் நிலநடுக்கத்தையும் தாங்கும் வகையில் இல்லை. டெல்லி நிலநடுக்க மண்டலத்தில் 4ஆவது ஜோனில் இருக்கும் நிலையில், இது அவசியமாகிறது.
இந்தச் சூழலில் தான் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. பழைய கட்டிடத்தை இடிப்பதற்குப் பதிலாக அதற்கு அருகே புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இதற்கு 2019இல் அடிக்கல் நாட்டிய நிலையில், கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. கொரோனா காலத்திலும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு கட்டுமான பணிகள் படுவேகமாக நடைபெற்றது.

பழைய நாடாளுமன்ற கட்டிடம் ஏற்கனவே முழுமையாக இருந்தது. அதாவது கூடுதல் எம்பிக்கள் யாரும் அமர முடியாத நிலை இருந்தது. வரும் காலத்தில் எம்பிக்கள் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்றும் இதைக் கருத்தில் கொண்டே புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்படுவதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே இந்தக் கட்டிடம் முழுமையாகக் கட்டப்பட்ட நிலையில், இதைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார்.
அப்போது பிரதமர் மோடி பேசும் போது பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். எம்பிக்களின் எண்ணிக்கை உயர்வது குறித்தும் அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். அதாவது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும் என்பதைக் கருத்தில் கொண்டே புதிய நாடாளுமன்றம் கட்டிடம் கட்டும் முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். தேசத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல எம்பிக்கள் சபதம் ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "வரும் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரப் போகிறது. எம்பிக்கள் எண்ணிக்கை உயர உள்ளதால் அவர்கள் எங்கே அமர்வார்கள் என்ற கேள்வி எழுந்தது. இதனால் கூடுதல் இருக்கைகளுடன் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளது." என்று அவர் தெரிவித்தார்.
-
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக?












Click it and Unblock the Notifications