பீகாரில் அதிகரிக்கும் இஸ்லாமியர்கள் மக்கள் தொகை.. சீமாஞ்சல் மண்டலத்தில் என்ன நடக்கிறது? பின்னணி
டெல்லி: ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் பீகாரின் சீமாஞ்சல் மண்டலத்தில் முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அரசியலை தீவிரப்படுத்தியுள்ளதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. இத்தனை காலம் இஸ்லாமியர் வாக்குகளை மனதில் வைத்து அரசியல் நடவடிக்கைகளை எடுத்து வந்த அந்த கட்சி தற்போது.. அந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.
பீகாரில் இஸ்லாமிய மக்கள்தொகையின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஏற்கனவே புகார் உள்ளது. இந்த நிலையில்தான் வங்கதேச மக்களின் சட்டவிரோத ஊடுருவல் காரணமாக அங்கே இஸ்லாமிய மக்கள் தொகை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளதாம்.

முக்கியமாக கிஷன்கஞ்ச், அராரியா, கதிஹார் மற்றும் பூர்னியா போன்ற மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வகையில் இஸ்லாமிய மக்கள்தொகை அதிகரித்து உள்ளதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து பீகாரில் சட்டவிரோதமாக குடியேறும் இஸ்லாமிய மக்கள் தொகை காரணமாக நாட்டின், மாநிலத்தின் பாதுகாப்பிற்கும், மக்கள் தொகை விகிதத்திலும் பாதிப்புகள் ஏற்பட தொடங்கி உள்ளன.
வரலாற்றாசிரியர் ஞானேஷ் குடாசியா இது தொடர்பாக கூறுகையில், வங்கதேசத்தில் இந்து மக்கள்தொகை சதவீதம் வெகுவாகக் குறைந்துள்ளது . பிரிவினையின் போது 42% ஆக இருந்த இந்து மக்கள் தொகை.. 2022 ஆம் ஆண்டுக்குள் வெறும் 7.95% ஆகக் குறைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டினார். வங்கதேசத்திற்கு அருகே உள்ள இந்திய மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள் தொகை உயர்ந்து வரும் நிலையில்.. வங்கதேசத்தில் இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இந்த தொடர் நிகழ்வுகள்.. இந்தியாவிற்கும் ஆபத்து.. இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
கிஷன்கஞ்ச், அராரியா, கதிஹார் மற்றும் பூர்னியா போன்ற மாவட்டங்களில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை உயர்வே இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. உதாரணமாக பீகாரின் சீமாஞ்சல் மண்டலத்தில் உள்ள பல மாவட்டங்களில் முஸ்லிம்கள் 40-70% ஆக உள்ளனர். கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் மிக மிக அதிக அளவில் இஸ்லாமியர்கள் உள்ளனர். RJD, காங்கிரஸ் மற்றும் AIMIM இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை இங்கே தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இந்த தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு இடையேதான் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் பீகாரின் சீமாஞ்சல் பகுதியில் முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அரசியலை தீவிரப்படுத்தியுள்ளதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.
சமீபத்தில் ராப்ரி தேவியின் இல்லத்தில் இஸ்லாமிய சடங்குகளை நடத்தியது இதற்கு ஒரு உதாரணம். முஸ்லீம் சமூகங்களுடனான அவர்களின் ஒற்றுமையை மேலும் உறுதிப்படுத்துகிறது. ஆனால் பிற சமூகங்களுக்கு.. முக்கியமாக இந்துக்களுக்கு இது பெரிய அழுத்தமாக மாறி உள்ளது. தங்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய சுதந்திர பிரிவினை மற்றும் வங்கதேச விடுதலைப் போரின் போது பீகாரின் முஸ்லிம் மக்கள் முக்கிய பங்கு வகித்ததாக ஏற்கனவே புகார்கள் வைக்கப்படுகின்றன. பாகிஸ்தான், வங்கதேசத்தின் உருவாக்கத்திற்கு பின்பும் கூட பீகாரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, சட்டவிரோத ஊடுருவல் அதிகரிப்பது இந்தியாவிற்கு சிக்கலாக மாறி உள்ளது.
பீகாரில் உள்ள இஸ்லாமியர்களை திருப்திப்படுத்தவே காங்கிரஸ், RJD போன்ற கட்சிகள் இங்கே சிஏஏ சட்டங்களை எதிர்த்தது. தங்களின் பலம் சரிந்துவிடும் என்பதால் சிஏஏ போன்ற சட்ட சீர்திருத்தங்களை கடுமையாக எதிர்த்தது. ஆனால் இதே எதிர்க்கட்சிகள் வங்கதேசத்தில் பாதிப்பிற்கு உள்ளாகும் இந்துக்களை பற்றி ஒரு வார்த்தையும் பேசுவது இல்லை.
பீகாரில் இந்து கூட்டங்களை, விழாக்களை கூட சரியாக நடத்த முடியாத சூழல் உள்ளது. சரஸ்வதி பூஜை ஊர்வலங்கள் மீதான தாக்குதல்கள் போன்ற சம்பவங்கள் பீகாரில் அதிகரித்து உள்ளன. ஆர்ஜேடி கட்சி செல்வாக்கு பெற்றுள்ள இடங்களில் எல்லாம் இந்து சமய நிகழ்வுகளுக்கு இடையூறுகள் ஏற்பட்டதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.
அங்கே இந்து பண்டிகைகளுக்கு சிக்கல் இருக்கும் நிலையில்.. இஸ்லாமியர்களை திருப்திப்படுத்தும் விதமாக சீமாஞ்சல் மண்டலத்தில் உள்ள பள்ளிகளில் வெள்ளிக்கிழமைகளை விடுமுறை தினங்களாக அறிவிக்கும் வழக்கம் தொடங்கி உள்ளது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகாரில் வங்கதேச இஸ்லாமியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேளையில் வங்கதேசத்தில் இந்துக்கள் எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது ஆபத்தான விஷயமாக பார்க்கப்படுகிறது.
பீகாரில் நிலவும் இந்த மத பிரிவினை சூழல், வாக்கு வங்கி அரசியலின் ஆபத்துகளையும், தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் போக்கையும் ஏற்படுத்தி உள்ளது. மத ரீதியாக எதிர்க்கட்சிகள் செய்யும் அரசியல்கள்.. பீகாரின் பாதுகாப்பிற்கும்.. இந்தியாவின் எதிர்காலத்திற்கும் சிக்கலை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications