பொது சிவில் சட்டத்துக்கு எதிராக உக்கிரத்தை காட்டுவோம்- முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் திட்டவட்டம்!
டெல்லி: பொது சிவில் சட்டம் அவசியம் என பிரதமர் மோடி பேசியிருக்கும் நிலையில் பொது சிவில் சட்டத்தை கடுமையாக எதிர்ப்போம் என முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நாடு விடுதலை அடைந்த காலம் முதல் பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் பொது சிவில் சட்டங்களால் தனிநபர் சட்டங்கள் பாதிக்கப்படும் என்கிற அச்சமும் இருந்து வருகிறது. நாட்டின் சட்ட ஆணையம், உச்சநீதிமன்றமும் பொது சிவில் சட்டம் தொடர்பாக கருத்துகளை முன்வைத்திருக்கின்றன.
அண்மையில் பொது சிவில் சட்டம் தொடர்பாக சட்ட ஆணையம் கருத்துகளை கேட்டிருக்கிறது. இதனையடுத்து பொது சிவில் சட்டம் தொடர்பாக மீண்டும் விவாதம் நடைபெற்று வருகிறது. போபாலில் நேற்று பேசிய பிரதமர் மோடி, பொது சிவில் சட்டம் அவசியமானது என வலியுறுத்தி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் அவசர கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முஸ்லிம் தனிநபர் வாரியத் தலைவர் ரஹ்மானி, கலீத் ரஷீத் மவுலானா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பொது சிவில் சட்டம் தொடர்பாக சட்ட ஆணையத்திடம் எப்படியான கருத்துகளை முன்வைப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத் தலைவர் ரஹ்மானி, பொது சிவில் சட்டத்தை முழுமையாகவே எதிர்க்கிறோம். இதனையே சட்ட ஆணையத்திடமும் வலியுறுத்த இருக்கிறோம் என்றார். அத்துடன் பொது சிவில் சட்டத்தால் இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினருமே பாதிக்கப்படுவர். இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்டது. இந்தியாவில் ஒற்றைத்தன்மை என்பதில் எதனிலும் சாத்தியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அனைத்துக் கூட்டணி கட்சிகளும் பொது சிவில் சட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றன. பொது சிவில் சட்டத்தை முதலில் இந்து மதத்தில்தான் அமல்படுத்தவேண்டும் என திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன் கூறியிருந்தார். விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் பொது சிவில் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications