சோமாலியா அருகே கடத்தப்பட்ட சரக்கு கப்பலை மீட்டது இந்திய கடற்படை.. 15 மாலுமிகளும் பத்திரமாக மீட்பு
டெல்லி: 15 இந்திய மாலுமிகளுடன் சோமாலியா அருகே கடத்தப்பட்ட சரக்கு கப்பலை இந்திய கடற்படை மீட்டது. 15 இந்திய மாலுமிக்களும் பத்திரமாக மீட்கப்படுள்ளனர்.
அரபிக் கடலில் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மால்டோவா நாட்டுக்கு சொந்தமான எம்வி ருயின் என்ற சரக்கு கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இந்த சரக்கு கப்பலில் 18 மாலுமிகள் பயணித்தனர்.

இந்த கப்பல் கடத்தப்பட்ட போது ஏடன் வளைகுடாவில் இந்திய போர் கப்பல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. இதனையடுத்து எம்வி ருயின் சரக்கு கப்பலை மீட்க போர்க் கப்பல்களும் விமானங்களும் களத்தில் இறங்கின. ஐரோப்பிய யூனியன் கடற்படையும் இணைந்து கொண்டது. இந்த கடத்தலின் போது படுகாயமடைந்த மாலும் ஒருவரை இந்திய கடற்படை மீட்டது.
அரபிக் கடல் பகுதியில் சோமாலியா கடற்கொள்ளையர்களின் கடத்தல் அச்சத்துக்கு நடுவேதான் சரக்கு கப்பல்கள் பயணிக்கின்றன. இந்த நிலையில் 15 இந்திய மாலுமிகளுடன் எம்வி லைலா நோர்ஃபோக் என்ற சரக்கு கப்பல் சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. லைபீரியா நாட்டு கொடியுடன் வந்த இந்த சரக்கு கப்பலை சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.
இந்தக் கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து ஐ.என்.எஸ். சென்னை போர்க் கப்பல், கடற்படை விமானங்கள் உடனடியாக கடத்தப்பட்ட கப்பல் இருப்பிடத்தை நோக்கி விரைந்தது. மேலும் கடத்தப்பட்ட இந்திய மாலுமிகளைத் தொடர்பு கொண்டு கடற்படையினர் பேச்சுவார்த்தை நடத்தியது. தொடந்து எச்சரிக்கை கொடுத்து கப்பலுக்குள் புகுந்த கடற்படையினர் கப்பலை மீட்டனர்.
கப்பலில் ஆய்வு மேற்கொண்டதில் கடற்கொள்ளையர்கள் யாரும் இல்லை. கடற்படையினர் வருவதற்கு முன்பே தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. கப்பலில் 15 இந்திய மாலுமிகளும் பிலிப்பைன்சை சேர்ந்த 6 பேரும் பத்திரமாக உள்ளனர். கப்பல் புறப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications