கடும் குளிர், வெயிலை கடந்தாச்சு.. டெல்லியில் போராடும் விவசாயிகளை அச்சுறுத்தும் கொரோனா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கொரோனாவிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது சவாலாக இருக்கிறது என்று அந்த மாநில அனில் விஜ் தெரிவித்தார்.

கோவிட் -19 நிலைமை குறித்து வியாழக்கிழமை மாலை பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்த ஆலோசனையில் அனில் விஜ் பங்கேற்றார்.

My concern is to protect farmers from Covid-19 at Haryana border: Anil Vij

பிறகு நிருபர்களிடம் அவர் கூறுகையில், "பிரதமர் அளித்த வழிகாட்டுதல்களில் நாங்கள் செயல்படுத்துவோம். ஆனால் எனது கவலை விவசாயிகளை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதாகும்." என்று தெரிவித்தார்.

விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கி சுமூக தீர்வு எட்ட விரைவில் விவசாய அமைச்சருக்கு கடிதம் எழுதுவதாகவும் விஜ் கூறினார்.

"விவசாயிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பித்தால்தான் விவசாயிகள் போராட்டம் முடிவடையும் என்பதால் நான் மத்திய விவசாய அமைச்சருக்கு கடிதம் எழுதப் போகிறேன்" என்று விஜ் கூறியுள்ளார்.

"அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.

டெல்லி எல்லையில் ஹரியானா விவசாயிகள் பெருமளவுக்கு போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் அண்டை மாநில விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நான்கு மாதங்களை எட்டிவிட்டது. பிற மாநில விவசாயிகளுக்கு இதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. ஏற்கனவே குளிர்காலம் அதன்பிறகு தற்போது கோடைகாலம் ஆகியவற்றிற்கு நடுவே அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள். நோய் பரவல் பிரச்சினையிலும் அவர்கள் சிக்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+