எனக்கு கோபம் எல்லாம் வராது.. என் குரலே அப்படித்தான்! நான் என்ன செய்ய..? மக்களவையில் அமித் ஷா கலகல!
டெல்லி : மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா விவாதத்தின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சத்தமாக பேசிய நிலையில், காஷ்மீர் தொடர்பான கேள்விகளை தவிர வேறு எதற்கும் கோபப்படுவதில்லை எனவும், எனது குரலே அப்படித்தான் எனவும், அது எனது manufacturing defect என பேசி அவையில் உறுப்பினர்களை சிரிப்பில் ஆழ்த்தினார்.
நாடாளுமன்ற மக்களவையில் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதாவை கடந்த வாரம் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தாக்கல் செய்தார்.
இந்த மசோதா சட்டமானால் இந்தியாவில் சிறைக் கைதிகள், குற்றவாளிகளின் அடையாளம் மற்றும் உயிரியல் மாதிரிகளை சேகரித்து வைக்கும் அதிகாரம் அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.

குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா
அதாவது, குற்றவாளிகள் சந்தேக நபர்களின் விரல் பதிவுகள், உள்ளங்கை-அச்சு மற்றும் கால்-அச்சு பதிவுகள், புகைப்படங்கள், கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன், உடல் மற்றும் உயிரியல் மாதிரிகள் மற்றும் அவற்றின் பகுப்பாய்வு ஆகியவற்றை சேகரித்து, சேமித்து, பாதுகாத்தல் மற்றும் பதிவுகளை பகிர்தல் அதிகாரம் அளிக்கும்.

மக்களவையில் விவாதம்
இந்த மசோதா மீதானா விவாதத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்து பேசினார். ஆனால் இன்றும் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பேசின. எதிர்கட்சிகள் கடுமையான வாதங்களை முன்வைத்த நிலையில், அதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "குற்ற விசாரணையை மிகவும் திறமையாகவும் விரைவாகவும் செய்ய" அத்தகைய அளவீடுகளை எடுக்கவும், நாட்டின் பாதுகாப்புக்காகவே இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

அமித் ஷா பதில்
மேலும் மசோதா குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அச்சத்தைப் போக்க தான் விரும்புவதாகவும் அமித் ஷா கூறினார். அப்போது மக்களவை உறுப்பினர் தாதா கூறிய கருத்துக்கு பதில் அளிக்க அமித் ஷா தயரான நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் "அமைச்சர் தாதாவுக்கு கோபமான தொனியில் பதிலளித்தார்" என லேசாக கிண்டல் செய்யும் வகையில் கூறினார். அப்போது அமைச்சர் அமித் ஷா தனது பதிலால் அவையில் இருந்த அனைவரையும் சிரிக்க வைத்தார்.

பதிலால் கலகலப்பு
"நான் யாரையும் திட்டுவது இல்லை. என் குரல் ஹை பிட்சாக இருந்தது, நான் என்ன செய்ய என குரலே அப்படித்தான், நான் என்ன செய்ய இது manufacturing defect என்றார். மேலும் "நான் கோபப்படுவதில்லை, காஷ்மீர் தொடர்பான கேள்விகளுக்கு மட்டும் தான் கோபாம் வரும்," என்று அவர் கூறினார். ஜம்மு காஷ்மீரில் இருந்து 370வது பிரிவை ரத்து செய்வதற்கான மசோதாவை ஆகஸ்ட் 2019ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேறும் போது, அமித் ஷாவுக்கும், காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதை குறிப்பிட்டுதான் அமித் ஷா அப்படி பேசியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.












Click it and Unblock the Notifications