நாடாளுமன்றம் பாராளுமன்றம் இரண்டும் ஒன்றா.. ஆய்வாளர்கள் சொல்வது என்ன?
டெல்லி: நாடாளுமன்றம் பாராளுமன்றம் இரண்டும் ஒன்றா என்றால் இரண்டுமே ஒன்று தான் என்பதே பதிலாக இருக்கிறது. அதே நேரம் பார் என்பது உலகு. பார் ஆளு மன்றம் உலகை ஆட்சி செய்யும் மன்றம். ஐ நா சபையை பாராளுமன்றம் என்றால் ஓரளவு பொருத்தமாக இருக்கும். இந்திய ஆட்சி மன்றத்தை நாடாளுமன்றம் என்றே அழைக்கவேண்டும். பாராளுமன்றம் என்று அழைப்பது தவறு.
Parliament என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையாக இருப்பதால் அதனை பாராளுமன்றம் என்று தவறாக அழைக்கின்றனர். நாடாளுமன்றம் என அழைப்பதே சரியாக இருக்கும் என்று சில நூல் ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
parler என்ற பிரன்ச்சு(French)வார்த்தையில் இருந்து வந்தது. பேசு என்பதே அச்சொல்லின் பொருள். Althing என்னும் ஐஸ்லாந்து பார்லிமென்ட் உலகின் பழமையானது. காலம். கி பி 930. மக்கள் அவை என்று தமிழில் அழைக்கிறோம். ( Parliament)இந்தியா முழுவதும் இருந்து மக்களால் உறுப்பினர் கள் தேர்ந்தேடுக்கபடுகிறார்கள். பெரும்பான்மை பெற்ற கட்சி பிரதமரை தேர்ந்தெடுக்கிறது. மொத்த பாராளுமன்ற சட்டசபை உறுப்பினர்கள் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கிறார்கள். தேர்தல் ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடக்கிறது.

நமது நாட்டில் அரசாங்கம் என்பது சட்டமியற்றும் துறை நீதித்துறை நிர்வாகத்துறை என்ற மூன்று அலகுகளை கொண்டது. இதில் சட்டம் இயற்றும் துறை தான் பாராளுமுன்றம் அல்லது நாடாளுமன்றம் என்று அழைக்கிறார்கள். பார்லிமெண்ட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவதற்கு இணையாக பாராளுமன்றம் என்ற சொல் இருப்பதால் அதனை தமிழில் நேரடியாக பாராளுமன்றம் என்று அழைக்கிறார்கள். இது ஓரளவு பொருத்தம் என்றாலும், நாட்டு மக்களுக்காக சட்டம் இயற்றும் அவை என்பதால் அதனை நாடாளுமன்றம் என்று அழைப்பது மிகவும் பொறுத்தமாக இருக்கும் சில சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
ஆங்கிலத்தில் பார்லிமெண்ட் என்றே இருக்கிறது. பாராளுமுன்றம் அல்லது நாடாளுமன்றத்தில் மக்களவை , மாநிலங்களவை என்று இரு அவைகள் இருக்கின்றன. மக்களவை உறுப்பினர்களை பொதுமக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கிறார்கள். மாநிலங்களவை உறுப்பினர்களை அந்தந்த மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்கிறார்கள்.
மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டிலும் நிறைவேறினால் தான் ஒரு சட்டம் நடைமுறைக்கு வரும். ஒருவேளை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாமல் போனால்கூட்டுக்கூட்டத்தை கூட்டித்தான் நிறைவேற்ற முடியும். மாநிலங்களவையை விட மக்களவை அதிக அதிகாரம் உள்ள இடமாகும்.
இந்தியாவில் மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 12 உறுப்பினர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார். இந்த 12 பேரைத் தவிர்த்து மற்றவர்கள் இந்திய மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களால் விகிதாச்சார பிரதிநித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும். மாநிலங்களவைத் தலைவராக குடியரசுத் துணைத்தலைவர் பதவி வகிப்பார்.
மக்களவை என்பது இந்திய நாடாளுமன்றத்தின் கீழவை ஆகும். இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 545 ஆகும். இது மாநிலத் தொகுதிகளில் இருந்தும், யூனியன் பிரதேச தொகுதிகளில் இருந்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் 2 நியமன உறுப்பினர்களையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும். இதில் பெரும்பான்மை உள்ளவர்கள் தான் நாட்டை ஆள முடியும். தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டை ஆண்டு வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications