பெரிதாக வெடிக்கும் நரவானே புத்தக விவகாரம்.. உள்ளே வந்த டெல்லி போலீஸ்.. பாய்ந்த அதிரடி நடவடிக்கை
டெல்லி: முன்னாள் ராணுவத் தளபதி நரவானே எழுதிய 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' விவகாரம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்தப் புத்தகம் இதுவரை வெளியாகாத நிலையில், அதன் நகல்கள் புழக்கத்தில் இருப்பது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நரவானேவின் புத்தகத்திற்கு இதுவரை பாதுகாப்புத் துறை அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் கடந்த ஒரு வாரமாகவே அமளி தொடர்ந்து வருகிறது. இதனால் லோக்சபா தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்படுகிறது. இன்று கூட காலை அவை தொடங்கியவுடனேயே எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. அமளி தொடர்ந்ததால் அவை நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது.

காரணம் என்ன!
ராகுல் காந்தி கடந்த வாரம் லோக்சபாவில் உரையாற்றினார். அப்போது அவர் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே எழுதிய 'ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி' என்ற புத்தகத்தில் இருந்து சில கருத்துகளைக் குறிப்பிட முயன்றார். இருப்பினும், சபாநாயகர் அதற்கு அனுமதி தரவில்லை. இது தொடர்பாகவே நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளி நிலவுகிறது.
அதாவது நரவானே புத்தகம் இதுவரை வெளியிடப்படவில்லை. பொதுவாக ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படை அதிகாரிகள் எழுதும் புத்தகத்திற்குப் பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதி தேவை. இதுவரை பாதுகாப்பு அமைச்சகம் நரவானே புத்தகத்திற்கு அனுமதி தராத நிலையில், ராகுல் அது குறித்துப் பேச அனுமதி மறுக்கப்பட்டது. அங்கீகரிக்கப்படாத ஆவணங்கள் நாடாளுமன்றப் பதிவேட்டின் ஒரு பகுதியாக ஆக முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
வழக்குப்பதிவு
இதற்கிடையே இந்த விவகாரத்தில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்னும் வெளியிடப்படாத புத்தகத்தின் நகல்கள் புழக்கத்தில் இருப்பது குறித்து டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. இந்தத் தகவல் சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தித் தளங்களில் பரவியதை அடுத்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தப் புத்தகம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து (பாதுகாப்பு துறை) தேவையான அங்கீகாரத்தைப் பெறவில்லை என்ற போதிலும், அதன் பிரதிகள் இணையத்தில் பரவியிருக்கிறது. இதன் அடிப்படையில் டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளது. டெல்லி போலீசாரும் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளனர்.
சிக்கல் என்ன
இந்தப் புத்தகம் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் அச்சிடப்படக்கூடாது என்று இருந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதன் பிரதியை மக்களவையில் காட்டியிருந்தார். அது நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
"ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தின் பிரதி, உரிய அனுமதி இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பரவுவதாகக் கிடைத்த தகவல்களை எடுத்துக் கொண்டு இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.. இந்தப் புத்தகம் சில ஆன்லைன் தளங்களில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது போலத் தகவல் பரவிய நிலையில், அது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றம்
கடந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி இந்தப் புத்தகத்தின் பிரதியை வெளிப்படையாகக் காட்டிய நிலையில், இது அரசியல் விவாதமாகவும் மாறியது. இதனால் லோக்சபா நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டது. முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம். நரவானேவின் இந்த புத்தகத்தை பற்றி விவாதிக்கப் பயந்தே, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி மக்களவைக்கு வரவில்லை என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications