இந்தியாவில் எந்த பிரதமரும் செய்யாத சாதனை.. பிரதமர் மோடி வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் தரமான சம்பவம்
டெல்லி: இந்தியாவில் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவிற்கு பிறகு தொடர்ந்து மூன்று முறை பிரதமராக பதவி வகிப்பது நரேந்திர மோடி தான். 11 ஆண்டுகளை கடந்து பிரதமராக உள்ள நரேந்திர மோடி, இந்த காலக்கட்டத்தில் 17 நாடுகளின் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருக்கிறார். இதன் மூலம் நான்கு பிரதமர்களின் உரைகளை சமன் செய்துள்ளார். அதாவது எந்த இந்திய பிரதமரும் இத்தனை நாடாளுகளின் நாடாளுமன்றத்தில் போய் உரையாற்றியது இல்லை. அந்த சாதனையை பிரதமர் மோடி நிகழ்த்தியுள்ளார்.
இந்தியாவில் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருதான் அதிகபட்சமாக 17 ஆண்டுகள் பிரதமராக இருந்துள்ளார். தொடர்ந்து மூன்று முறை பிரதமராக இருந்தது. சுதந்திர இந்தியாவில் பிரதமர் ஜவஹர்லால் நேரு தான். அதன்பிறகு வந்தவர்கள் 10 ஆண்டுகளை யாருமே தாண்டவில்லை.. மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் பிரதமராக இருந்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, ராஜீவ் காந்திக்கு பிறகு முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி பொறுப்பேற்றார்.

3வது முறை பிரதமர்
2019ம் ஆண்டிலும் முழு மெஜார்ட்டியுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி பெறுப்பேற்றார். ஆனால் 2024ம் ஆண்டில் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பீகாரில் நிதீஷ்குமாரின் கட்சி, ஆந்திராவில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் கட்சி உள்பட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 3ஆவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். கடந்த 11 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் உள்ள நரேந்திர மோடி, கொரோனா காலக்கட்டத்தை தவிர மற்ற ஆண்டுகளில் பல்வேறு நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். இதுவரை பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளார்.
17 நாடுகளின் நாடாளுமன்றத்தில் உரை
ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். முன்னதாக, இந்த 5 நாடுகள் பயணத்தில் கானா மற்றும் டிரினிடாட் டொபாகோ நாடுகளின் நாடாளுமன்றத்திலும் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி இருந்தார். இவற்றையும் சேர்த்து கடந்த 11 ஆண்டுகளில் அவர் மொத்தம் 17 நாடுகளின் நாடாளுமன்றங்களில் உரையாற்றியிருக்கிறார். இதில் வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளின் நாடாளுமன்றங்களும் உள்ளன.
அமெரிக்கா இங்கிலாந்தில் உரை
முக்கியமாக சொல்வது என்றால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நேபாளம், மங்கோலியா, பூடான் உள்ளிட்ட நாடுகளின் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தியுள்ளார். அதேநேரம் முந்தைய காங்கிரஸ் பிரதமர்களில் மன்மோகன் சிங் 7 நாடுகளின் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தி உள்ளார்.
மோடி சாதனை
இதைப்போல இந்திரா காந்தி (4), ஜவஹர்லால் நேரு (3), ராஜீவ் காந்தி (2), நரசிம்மராவ் (1) ஆகிய முன்னாள் பிரதமர்களும் வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் உரையாற்றி இருக்கிறார்கள். இதன் மூலம் காங்கிரஸ் பிரதமர்கள் ஆற்றிய மொத்த நாடாளுமன்ற எண்ணிக்கையை (17) பிரதமர் மோடி சமன் செய்திருக்கிறார். பல்வேறு நாடுகள் அந்த நாட்டின் உயரிய விருதுகளை பிரதமர் மோடிக்கு வழங்கி உள்ளன. சர்வதே அளவில் மிகவும் ஈடுபாடு கொண்ட இந்திய தலைவர்களில் ஒருவராக பிரதமர் மோடி இருப்பதை இது காட்டுவதாக கூறப்படுகிறது.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications