முஸ்லீம், பாகிஸ்தான் பற்றி 224 முறை பேசிய மோடி..வேலையின்மை குறித்து வாயே திறக்கவில்லை- கார்கே தாக்கு
டெல்லி: மக்களைப் பிளவுபடுத்த பல்வேறு முயற்சிகளை மோடி செய்ததாகச் சாடிய காங்கிரஸ் தலைவர் கார்கே, முஸ்லீம் பாகிஸ்தான் குறித்து மட்டும் பிரதமர் மோடி 224 முறை பேசியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், பாஜக மற்றும் பிரதமர் மோடியைச் சாடிய காங்கிரஸ் தலைவர் கார்கே சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

கார்கே: இந்த பிரச்சாரத்தில் மதம் ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி திசை திருப்ப பல்வேறு முயற்சிகளை பாஜக மேற்கொண்டதாக கார்கே சாடியுள்ளார். கோயில்- மசூதி- முஸ்லீம் குறித்து மட்டும் பிரதமர் மோடி 421 முறை பேசியுள்ளதாகக் கூறிய கார்கே, அதேநேரம் இந்தியா கூட்டணி தொடர்ந்து மக்கள் பிரச்சனைகள் குறித்தே குரல் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சி கூட்டணியான "இந்தியா" தனிப்பெரும்பான்மை பெற்று மோடி அரசை அகற்றும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், இந்த முறை பாஜகவுக்கு மீண்டும் அதிகாரத்தைக் கொடுத்தால் அது ஜனநாயகத்தின் முடிவாக இருக்கும் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர்கள்: இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, "மக்கள் புதிய அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்கான முடிவு ஜூன் 4ஆம் தேதி தெரிந்துவிடும். அடுத்து அமையும் இந்தியா கூட்டணி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கொடுக்கும் அரசை அமைக்கும். இந்தத் தேர்தலில் மக்களைத் திசைதிருப்ப மோடியும் பாஜக தலைவர்களும் கடுமையாக முயன்றனர்.
இந்த 2024 லோக்சபா தேர்தல் நீண்ட காலம் நினைவில் இருக்கும் தேர்தலாக இருக்கும். ஏனென்றால் சாதி, மதம் மொழிக்கு அப்பாற்பட்டு ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற மக்கள் ஒன்று திரண்டுள்ளனர். திசை திரும்ப நடந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.. அதேநாரம் எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு, வேலையின்மை, பொருளாதார சமத்துவமின்மை குறித்தே தங்கள் பிரச்சாரத்தை முன்னெடுத்தன.
எத்தனை முறை: கடந்த 15 நாட்களில் பாஜக பிரச்சாரம் மற்றும் பிரதமரின் பேச்சுகளைப் பார்த்தால் உங்களுக்கே புரியும். பிரதமர் மோடி காங்கிரஸின் பெயரை 232 முறையும், தனது சொந்த பெயரை 758 முறையும் உச்சரித்துள்ளார். அதேபோல இந்தியா கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் குறித்து 573 முறை பேசியிருக்கிறார். ஆனால் ஒருமுறை கூட வேலையின்மை பற்றிப் பேசவில்லை. இதிலிருந்தே அவர் மக்கள் பிரச்சினைகளில் எந்தளவுக்கு அக்கறை கொண்டுள்ளார் என்பது உங்களுக்குப் புரிந்து இருக்கும்.
ஜாதி அல்லது வகுப்புவாத அடிப்படையில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்ற தேர்தல் ஆணையம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதையும் தாண்டி சமூகத்தைப் பிளவுபடுத்தும் வகையில் மோடி பேசியுள்ளார். கோயில், மசூதி, முஸ்லீம் மற்றும் பிற மதங்களைப் பற்றி மோடி 421 முறை பேசியுள்ளார். முஸ்லிம், பாகிஸ்தான், சிறுபான்மையினர் என்றும் 224 முறை குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தையும் தாண்டி மோடியும் தன்னை தானே கடவுள் என்றும் கூட கூறியிருந்தார்" என்று அவர் தெரிவித்தார்.
தலித் பிரதமர்: தலித் ஒருவர் நாட்டின் பிரதமராக வேண்டும் என்று இந்தியா கூட்டணியில் குரல்கள் எழுந்துள்ளது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "நான் தலித் என்பதால் எனக்குப் பதவி தர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிடம் இதுவரை நான் எந்தவொரு கோரிக்கையையும் விடுத்தே இல்லை. பிரதமர் யார் என்பது குறித்து எதிர்க்கட்சி கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்படும்.
இந்த தேர்தலில் மோடி 206 பிரச்சார கூட்டங்களை நடத்தியுள்ளார். கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் பிரதமர் மோடி இந்தளவுக்குப் பிரச்சாரங்களை நடத்தியதே இல்லை.. பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்பதை அவர் புரிந்து கொண்டார் என்பதையே இது காட்டுகிறது.
காந்தி: மகாத்மா காந்தியின் படம் வந்த பிறகே உலகம் காந்தி குறித்துத் தெரிந்து கொண்டதாக மோடி பேசியிருந்தார். ஒரு படத்தைப் பார்த்த பிறகே மகாத்மாவைப் பற்றித் தெரிந்து கொண்டதாகப் பிரதமர் கூறியதைக் கேட்டு எனக்குச் சிரிப்பு வருகிறது. அவர் மகாத்மா காந்தியைப் பற்றிப் படித்திருந்தால், அவர் அவ்வாறு கூறியிருக்க மாட்டார். ஆனால், கவலைப்பட வேண்டாம். ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு காந்தி குறித்துப் படிக்க மோடிக்கு நிறைய டைம் கிடைக்கும்" என்றார்.
-
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications