‛உதவிக்கு ரெடி’.. புதினிடம் பேசிய உடனே உக்ரைன் அதிபருக்கு போன் போட்ட மோடி! முடிவுக்கு வரும் போர்?
டெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இன்று பேசிய பிரதமர் மோடி அதன்பிறகு உடனடியாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை தொடர்பு கொண்டு பேசியிருப்பது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிராக உள்ள அமெரிக்கா, நேட்டோ எனும் அமைப்பை உருவாக்கி அதில் ஒவ்வொரு ஐரோப்பிய நாடாக இணைத்துக்கொண்டே வந்தது. இப்படி இணைக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்க ராணுவ துருப்புக்கள் நிலைநிறுத்தப்படும். ஏறத்தாழ எல்லா ஐரோப்பிய நாடுகளும் இதில் இணைந்த நிலையில், ரஷ்யாவை ஒட்டியுள்ள உக்ரைனையும் இணைக்க அமெரிக்க முயன்றது.

இதற்கு உக்ரைனும் ஓகே சொல்ல, அதற்கான வேலைகள் நடந்தன. அமெரிக்காவும்-உக்ரைனும் கைகோர்ப்பது தங்கள் நாட்டுக்கு ஆபத்தில்தான் போய் முடியும் என ரஷ்யா முன்னரே கனித்திருந்தது. அதாவது உக்ரைனை தாண்டிவிட்டால் ரஷ்யாவுக்குள் நுழைந்து விடலாம். எனவே நேட்டோவில் இணைய கூடாது என்று உக்ரைனை ரஷ்யா தொடர்ந்து எச்சரித்து வந்தது. இருந்தும், ரஷ்யாவின் பேச்சை உதாசினப்படுத்தி, நேட்டோவில் நைசாக நுழைந்துவிடலாம் என உக்ரைன் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இந்த புள்ளிதான் போருக்கான தொடக்கம்.
கடந்த 2022ம் ஆண்டு உக்ரைனின் நடவடிக்கையை எதிர்த்து ரஷ்யா தீவிர போரில் இறங்கியது. போர் தீவிரமாக நடந்து வரும் நிலையில், போர் நிறுத்தம் மற்றும் உக்ரைனுக்கான மனிதாபிமான உதவி குறித்து பிரதமர் மோடி, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இன்று தொலைபேசியில் பேசியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி, “இந்தியா-உக்ரைன் நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் பேசினேன். அமைதிக்காக எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியாவின் ஆதரவை தெரிவித்தேன். மோதலை முடிவுக்கு கொண்டுவருவது குறித்தும் பேசினேன். அதேபோல உக்ரைனுக்கான மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும்” என தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
புதினுக்கு பறந்த போன்.. தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து சொன்ன மோடி!உக்ரைன்-ரஷ்யா போர் குறித்தும் பேச்சு
ரஷ்யா-உக்ரைன் போரின் தீவிர தன்மையை குறைத்ததில் இந்திய பிரதமரின் பங்கு மிக முக்கியமானது என சமீபத்தில் அமெரிக்கா கூறியிருந்தது. அதாவது,
“உக்ரைன் மீது ரஷ்யா தனது அணு ஆயுதங்களை பயன்படுத்தும் என்று நாங்கள் பயந்துகொண்டிருந்தோம். எனவே பிரதமர் மோடி உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்களிடம் அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாகம் இது குறித்து பேசியிருந்தது. அவர்களை புதினை, அணு ஆயதங்களை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள வலியுறுத்தியிருந்தது. இதன் அடிப்படையில், மோடி உள்ளிட்ட தலைவர்களின் முயற்சியால் உக்ரைன் மீதான அணு ஆயுத தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட்டது” என சர்வதேச செய்தி ஊடகத்தில் சமீபத்தில் பேட்டியளித்த அமெரிக்க அதிகாரிகள் கூறியிருந்தனர். இதனையடுத்து தற்போது உக்ரைன் அதிபருடன் மோடி பேசியிருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இதனையடுத்து தற்போது உக்ரைன் அதிபருடன் மோடி பேசியிருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது. முன்னதாக ரஷ்ய தேர்தலில் புதின் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மோடி வாழ்த்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications