சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் இந்தியர் சுபான்ஷு சுக்ல! நாசா உடன் முக்கிய ஒப்பந்தம்! இஸ்ரோ அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்காவின் நாசா உடன் சேர்ந்த இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ முக்கிய ஒப்பந்தத்தைப் போட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை நாசா சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்ப உள்ளது. ககன்யான் திட்டத்திற்கு முன்பாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. விண்வெளி ஆய்வுகளில் இஸ்ரோ படைத்து வரும் சாதனைகளை உலக நாடுகள் வியந்து பார்த்து வருகிறது.

Space nasa isro


இதற்கிடையே இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி மையம் அமெரிக்காவின் நாசா உடன் இணைந்து ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவை நாசா அமைப்பு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

முக்கிய ஒப்பந்தம்:
இஸ்ரோ அமைப்பு அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்ஸியம் ஸ்பேஸுடன் விண்வெளி விமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. . அதன்படி அடுத்து வரும் ஆக்ஸியம்-4 மிஷனில் இந்தியர் விண்வெளிக்குச் செல்ல இருக்கிறார். இதில் தான் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா முதன்மை பைலட்டாக தேர்வாகி இருக்கிறார். அதேபோல மற்றொரு இந்திய விமானப்படை அதிகாரியான குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் பேக்கப் மிஷன் பைலட்டாகவும் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ககன்யாத்ரி திட்டம்:
இந்தத் திட்டத்திற்கு "ககன்யாத்ரி" என்று பெயரிட்டுள்ளனர். விண்வெளிக்குச் செல்ல இந்த இரு அதிகாரிகளுக்கும் பயிற்சி ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மிஷினில் இந்தியர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் சில குறிப்பிட்ட ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். மேலும், அவர்கள் ஆய்வு மையத்திற்கு வெளியே விண்வெளிக்குச் சென்றும் ஆய்வு செய்வார்கள் எனக் கூறப்படுகிறது.

ஏன் முக்கியம்:
இஸ்ரோ அமைப்பு ககன்யான் திட்டத்தின் கீழ் இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது. இதற்காகப் பல ஆண்டுகளாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக விமானப்படையிலிருந்து நான்கு விமானிகள் தேர்வு செய்யப்பட்டு, ககன்யான் பணிக்காக பெங்களூரில் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. மூன்று நாள் நடக்கும் இந்த மிஷனில் இஸ்ரோவின் ராக்கெட் இந்த நான்கு விமானிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல உள்ளது.

இனி ஒரு நாளைக்கு 25 மணி நேரம்.. நிலவு விலகிச் செல்வதால் பூமியில் ஏற்படப் போகும் பகீர் மாற்றம்


பிறகு அந்த ராக்கெட் இந்தியக் கடல் பகுதியில் பூமிக்குப் பாதுகாப்பாகத் திரும்பும். அந்த ககன்யான் திட்டத்திற்கு முன்பு நாசா சுபான்ஷு சுக்லாவை விண்வெளிக்கு அனுப்பும் என தெரிகிறது.

Space nasa isro

யார் இவர்: இந்த மிஷினிற்கு குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் தேர்வாகி இருந்தனர். இந்தச் சூழலில் தான் ககன்யான் திட்டத்திற்கு முன்னதாகவே நாசாவின் மிஷனில் சுபான்ஷு சுக்லா விண்வெளி மையத்திற்குச் செல்ல உள்ளார். அவருக்கு பேக் அப்பாக பாலகிருஷ்ணன் நாயர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்தவர் குரூப் கேப்டன் ஷுபான்ஷு சுக்லா.. இவர் கடந்த 18 ஆண்டுகளாக இந்திய விமானப்படை பணியாற்றி வருகிறார். கார்கில் போரில் இந்திய வீரர்களின் வீரம் மற்றும் தியாகம் பற்றிய கதைகளைப் படித்த பிறகே, அவருக்கு ஆயுதப்படையில் சேர வேண்டும் எனத் தோன்றி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+