இனி ஒரு நாளைக்கு 25 மணி நேரம்.. நிலவு விலகிச் செல்வதால் பூமியில் ஏற்படப் போகும் பகீர் மாற்றம்
வாஷிங்டன்: நமது பூமியில் இருந்து நிலவு விலகிச் செல்வதை ஆய்வாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். இதன் காரணமாகப் பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும் என்பதையும் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். பூமியின் ஒரே நிரந்தரமான இயற்கைத் துணைக்கோளான நிலவு விலகிச் செல்வது என்பது பூமியில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நமது பூமிக்கு இருக்கும் ஒரே நிரந்தரமான இயற்கைத் துணைக்கோள் என்றால் அது நிலவு தான்.. இது சூரியக் குடும்பத்தில் இருக்கும் ஐந்தாவது மிகப்பெரிய துணைக்கோளும்.. மேலும், இரண்டாவது அடர்த்தியான துணைக்கோளாகும்.

சிறுவர்களின் கதைகள், கவிஞர்களின் கவிதைகள், ஆன்மீகவாதிகளின் நம்பிக்கை என அனைத்திலும் நிலவுக்கு மிக முக்கியமான இடம் இருக்கிறது. ஆனால், நிலவு குறித்த சமீபத்திய ஆய்வு அனைவருக்கும் அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.
நிலவு: அதாவது நமது பூமியின் ஒரே ஒரு இயற்கையான துணைக்கோளான நிலா இப்போது பூமியை விட்டு மெதுவாக நகர்ந்து செல்வது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது ஏதோ சயின்ஸ் பிக்ஷன் படம் போலத் தோன்றலாம்.. ஆனால் இது உண்மையான ஆய்வு தான்.. நிலவா குறித்துப் பல ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆய்வாளர் குழு இந்த ஆய்வு நடத்தியுள்ளனர். அவர்கள் நடத்திய ஆய்வில் தான் பூமியிலிருந்து சந்திரன் படிப்படியாகப் பிரிந்து செல்வது தெரிய வந்துள்ளது. மேலும், இதனால் பூமியிலும் பல வித மாற்றங்கள் நடக்கும் என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
சந்திரன்: இந்த ஆய்வில் பூமியிலிருந்து சந்திரன் ஆண்டுக்கு சுமார் 3.8 சென்டிமீட்டர் வீதம் பிரிந்து செல்வது தெரிய வந்துள்ளது. இந்த வேகத்தில் சந்திரன் தனியாகப் பிரிந்து செல்வது பூமியில் பகலின் நேரத்தை அதிகரிக்கும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இப்போது நமது பூமியில் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இருக்கும் நிலையில், நிலவு பிரிந்து செல்வதால் அது 25 மணி நேரமாக அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
25 மணி நேரம்: எது 25 மணி நேரமா.. அப்போ அதிக நேரம் ஆபீசில் இருக்க வேண்டுமா எனப் பதற வேண்டாம். இந்த மாற்றம் நடக்கப் பல கோடி ஆண்டுகள் ஆகும். ஆம் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு பிறகே பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக மாறும்.
அதேநேரம் இது ஏதோ இப்போது மட்டும் நடப்பது இல்லை. கடந்த காலங்களிலும் பூமியின் ஒரு நாள் என்பது தொடர்ந்து நீட்டித்தே வந்துள்ளது. சுமார் 1.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் ஒரு நாள் என்பது வெறும் 18 மணி நேரமாக மட்டுமே இருந்துள்ளது. அது பல கோடி ஆண்டுகளுக்குப் பின்னரே இப்போது இருப்பது போல 24 மணி நேரமாக மாறி இருக்கிறது.
என்ன காரணம்: பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான ஈர்ப்பு விசையே இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாகும். இந்த இரண்டிற்கும் இருக்கும் அலை சக்திகளில் ஏற்படும் மாற்றமே இதற்குக் காரணமாகும்.
இது தொடர்பாக விஸ்கான்சின்- மாடிசன் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் பேராசிரியர் ஸ்டீபன் மேயர்ஸ் கூறுகையில், "நிலவு நமது பூமியில் இருந்து விலகிச் செல்லும் போது, பூமி சுழலும் வேகமும் வெகுவாக குறையும். இப்படி நிலவு விலகிச் செல்ல செல்ல பூமியின் வேகம் குறைவதால் பகல் நேரம் என்பது அதிகரிக்கும். எங்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது இதுதான்.. மேலும் அடுத்த கட்டமாகப் பல பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளை ஆய்வு செய்ய விரும்புகிறோம்" என்றார்.
ஏன் இந்த ஆய்வு முக்கியம்: அதேநேரம் சந்திரன் பூமியில் இருந்து விலகிச் செல்கிறது என்பதைக் கண்டுபிடித்த முதல் ஆய்வு இதுவல்ல.. பல ஆண்டுகளுக்கு முன்பே இதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துவிட்டனர். இருப்பினும், விஸ்கான்சின்- மாடிசன் பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வு வரலாற்று மற்றும் புவியியல் சூழல் குறித்த விரிவான ஆய்வை செய்கிறது. நிலவு தன்னை தானே சுற்றும் வேகம் என்பது எப்போதும் ஒரே வேகத்தில் தான் இருக்கிறது. ஆனால், பூமி சுற்றும் வேகம் என்பது பல்வேறு விஷயங்களைப் பொறுத்து மாறிக் கொண்டே இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications