எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட்.. இன்று நாடு தழுவிய போராட்டம்! களமிறங்கிய இந்தியா கூட்டணி
டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ச்சியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், இதை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகள் இன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்தியது. டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 150 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்ததன் மூலம் 60 சதவிகித இந்திய மக்களின் குரலை மத்திய அரசு முடக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 13ம் தேதி நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் என்பதால், இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் வழக்கம்போல நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கின. மக்களவையில் மதியம் பூஜ்ஜிய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென எம்பிக்களின் இருக்கையின் மீது இளைஞர் ஒருவர் குதித்திருக்கிறார். பார்வையாளர்கள் மாடத்திலிருந்து யாரோ தவறி விழுந்துவிட்டார்கள் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் ஒரு சில விநாடிகளில் இளம் பெண் ஒருவரும் இதேபோல எம்பிக்களின் சீட் மீது குதித்திருக்கிறார். அப்போதுதான் எம்பிக்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. எனவே உடனடியாக அவர்கள் கூச்சலிட தொடங்கியுள்ளனர். கீழே குதித்தவர்கள் தங்கள் ஷுக்களிலிருந்து மர்ம பொருள் ஒன்றைய வெளியில் எடுத்திருக்கிறார்கள். அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியேறியுள்ளது. இது லைட்டான மூச்சு திணறலை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவர்களை நாடாளுமன்ற காவல்துறையினரும், எம்பிக்களும் மடக்கி பிடித்துள்ளனர்.
இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு அவையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவையினுள் இந்த சம்பவம் நடந்த அதே நேரத்தில், நாடாளுமன்றத்திற்கு வெளியே, வண்ண புகை வீசும் பட்டாசு போன்ற பொருளை கொண்டு இருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பம்சமே பாதுகாப்பு என்றுதான் சொல்லப்பட்டது. அப்படி இருக்கையில், இது போன்ற அத்துமீறல் எப்படி நடந்தது? என்பது குறித்து கேள்வியெழுப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த மறுநாள் டிசம்பர் 14ஆம் தேதி அவை மீண்டும் கூடியபோது, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது குறித்து பேசினார். ஆனால், உரிய விளக்கம் அளிக்கவில்லை. அதாவது நாடாளுமன்றத்தில் நுழைய வேண்டும் எனில் எம்பிக்களின் கடிதம் அவசியம். அப்படி இருக்கும்போது, 13ம் தேதி அத்துமீறலில் ஈடுபட்ட இருவருக்கு மைசூர் நாடாளுமன்ற தொகுதியின் பாஜக உறுப்பினர் பிரதாப் சிம்ஹாதான் கடிதம் வழங்கியிருக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பதாகைகளை தாங்கி கேள்வியெழுப்பினர்.
ஆனால் மத்திய அரசு தரப்பிலிருந்து பதில் அளிக்கப்படவில்லை. மாறாக புதிய நாடாளுமன்ற சட்டங்களை மீறி, மக்களவையில் பதாகைகளை கொண்டு வந்ததற்காகவும், போராட்டம் நடத்தியதற்காகவும் 140க்கும் அதிகமான எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், இந்த சஸ்பெண்ட் விவகாரத்தை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த போராட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை வகித்தார். இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
இதில் உரையாற்றிய ராகுல் காந்தி, "140க்கும் அதிகமான எம்பிக்களை சஸ்பெண்ட் செய்ததன் மூலம், அவர்களை தேர்ந்தெடுத்த மக்களின் குரலை பாஜக முடக்கிவிட்டது. நாடாளுமன்றத்தில் அத்துமீறலில் இளைஞர்கள் ஈடுபட்டதற்கு வேலையில்லா திண்டாட்டமும் முக்கிய காரணமாகும். வேலையில்லாததால் இளைஞர்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 7.30 மணி நேரம் வரை சோஷியல் மீடியாக்களில் செலவிடுகின்றனர். இவை எல்லாவற்றிற்கும் தீர்வு காண வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications