நேஷனல் ஹெரால்டு வழக்கு! ராகுல் காந்திக்கு இன்று ரெஸ்ட்! அடுத்த விசாரணை எப்போது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் ராகுல்காந்தியிடம் 3 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் ராகுல்காந்தி கேட்டு கொண்டதன் பேரில் இன்று அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அடுத்த விசாரணை தொடர்பாக அவருக்கு 4வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Recommended Video

    June 16 | காலை முக்கியச்செய்திகள் | Oneindia Tamil

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்குகள் பரிமாற்றத்தில் சட்டத்துக்கு விரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.

    இதுதொடர்பாக சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராக இருவருக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    ராகுலிடம் 3வது நாள் விசாரணை

    ராகுலிடம் 3வது நாள் விசாரணை

    சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி உள்ளார். ராகுல்காந்தி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார். நேற்றும், நேற்று முன்தினம் என 2 நாட்கள் ராகுல்காந்தி ஆஜராகி விளக்கம் அளித்தார். நேற்று 3வது நாளாக விசாரணைக்கு ஆஜரானார்.

     இன்று ஓய்வு; நாளை விசாரணை

    இன்று ஓய்வு; நாளை விசாரணை

    முதல் நாள் ராகுல்காந்தியிடம் 10 மணிநேரமும், 2வது நாள் 12 மணிநேரமும் விசாரணை நடந்த நிலையில் 3வது நாளான நேற்று ராகுல் காந்தியிடம் 8 மணிநேரம் விசாரணை நடந்தது. முழு விசாரணை முடிவடையாததால் தொடர்ந்து ராகுல்காந்தி ஆஜராக வேண்டி இருந்தது.இந்நிலையில் நாளை விசாரணைக்கு ஆஜராககோரி அமலாக்கத்துறை 4வது முறையாக சம்மன் அனுப்பியது. இன்று (வியாழக்கிழமை) ராகுல்காந்தி ஓய்வு கோரியதால் நாளை விசாரணை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

    கைது நடவடிக்கை

    கைது நடவடிக்கை

    முன்னதாக ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்றும் போராட்டங்கள் நடந்தன. இதனால் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் பரபரப்பாக உள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க 144 தடை உத்தரவு மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கட்சியினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

     போர்களமான போராட்டம்

    போர்களமான போராட்டம்

    போலீசார், துணை ராணுவத்தினர் காங்கிரஸ் தொண்டர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், நிர்வாகிகளை கைது செய்தனர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அமலாக்கத்துறை அலுவலகம் அருகே சாலையில் டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. இதற்கிடையே தான் போலீசார் காங்கிரஸ் அலுவலகம் உள்ளே நுழைந்து போராட்டம் நடத்தியவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை போலீசார் மறுத்துள்ளனர். இதற்கிடையே தங்களிடம் தவறாக நடந்துள்ளதாக போலீசார் மீது சில தலைவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+