மைனர் வீராங்கனையிடம் அத்துமீறிய பிரபல பயிற்சியாளர்! ஹோட்டல் அறைக்கு அழைத்து டெல்லியில் பயங்கரம்
டெல்லி: 17 வயதே ஆன மைனர் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையைப் பலாத்காரம் செய்ததாக இந்தியாவின் தேசிய துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளரான அன்குஷ் பரத்வாஜ் மீது பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பெர்பாமன்ஸ் ரிவ்யூ என அழைத்து பலாத்காரம் செய்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட இது போன்ற கொடூரங்கள் தொடர்ந்து நடந்தே வருகிறது. குறிப்பாகப் பல நேரங்களில் வேலியே பயிரை மேயும் கதையாக முக்கியமான பொறுப்பில் இருப்போரே இது போன்ற மோசமான குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அப்படியொரு மோசமான சம்பவம் இப்போது மீண்டும் நடந்துள்ளது.

அன்குஷ் பரத்வாஜ்
தேசியத் துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளரான அன்குஷ் பரத்வாஜ் மீது 17 வயது தேசிய வீராங்கனையைப் பாலியல் பலாத்காரப் புகாரைக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஹரியானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஃபரிதாபாத் ஹோட்டலில் அந்த வீராங்கனையை அழைத்துச் சென்று அன்குஷ் பலாத்காரம் செய்ததாக வீராங்கனையின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
ஃபரிதாபாத் பெண்கள் காவல் நிலையத்தில் அன்குஷ் பரத்வாஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.. போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டெல்லியில் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்த போது இச்சம்பவம் நிகழ்ந்தது. அந்தச் சிறுமியின் துப்பாக்கிச் சுடும் பெர்பாமன்ஸை ரிவ்யூ செய்கிறேன் எனச் சொல்லி, அன்குஷ் ஃபரிதாபாத் ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியைப் பலாத்காரம் செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் தகவல்
இது தொடர்பாக ஃபரிதாபாத் காவல்துறை கூறுகையில், "வழக்கின் தீவிரத்தன்மையைக் கருதி தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். மைனர் பெண்ணின் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த, சம்பவம் நடந்த நாளின் அனைத்துச் சிசிடிவி காட்சிகளையும் ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டுள்ளோம். முறைப்படி எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்" என்றார்.
இந்தியத் தேசியத் துப்பாக்கி சுடுதல் சங்கம் நியமித்த 13 தேசிய பிஸ்டல் பயிற்சியாளர்களுள் பரத்வாஜ் ஒருவராவார். இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக துப்பாக்கி சுடுதல் சங்கத்தின் பொதுச் செயலாளர் பவன் குமார் சிங் கூறுகையில், "இது சம்பவம் ஊடகம் மூலமே கவனத்திற்கு வந்துள்ளது. விசாரணை முடியும் வரை பயிற்சியாளர் அன்குஷ் அனைத்துப் பணிகளிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்; புதிய பணிகள் வழங்கப்படாது" என்றார்.
என்ன நடந்தது
முதலில் ஹோட்டல் லாபியில் சந்திக்கலாம் என்று பயிற்சியாளர் சொல்லியுள்ளார். லாபியில் தானே என்பதால் அந்த வீராங்கனையும் அங்கு வந்துள்ளார். ஆனால், பின்னர் திடீரென ரூமுக்கு வரும்படி சொல்லியுள்ளார். அதற்கு அந்த வீராங்கனை தயங்கியுள்ளார். இருப்பினும், பெர்பாமன்ஸ் ரிவ்யூவுக்காகவே அழைப்பதாக அவர் சொல்லி இருக்கிறார். சற்று தயங்கினாலும் வேறு வழியில்லை என்பதால் வீராங்கனை ரூமிற்கு போய் இருக்கிறார்.
மிரட்டல்
அப்போது தான் இந்தக் கொடூரம் நடந்துள்ளது. மேலும், இச்சம்பவத்தை வெளியில் சொன்னால், கேரியரையே அழித்துவிடுவேன் என்றும், குடும்பத்தினருக்குத் தீங்கு விளைவிப்பேன் என்றும் பயிற்சியாளர் மிரட்டியுள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த வீராங்கனை, நடந்ததைக் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.. மேலும், இதே பயிற்சியாளரால் மற்றொரு பெண் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையும் இதே போன்ற துன்புறுத்தலுக்கு ஆளானதாகத் தகவல்கள் சொல்லப்படுகிறது..












Click it and Unblock the Notifications