தேசியளவில் ஊரடங்கு அறிவிப்பு மட்டுமே இல்லை.. 98% மக்கள் ஏதோ ஒரு வகையான.. லாக்டவுன் கீழ் தான் உள்ளனர்
டெல்லி: இந்தியாவில் கடந்த ஆண்டை போல நாடு முழுவதும் ஊரடங்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும்கூட சுமார் 98% மக்கள் ஊரடங்கு அல்லது எதாவது ஒரு வகை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர்.
கொரோனா 2ஆம் அலையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. மற்ற நாடுகளில் இல்லாத அளவுக்குத் தினசரி கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது மக்களிடையே அச்சத்தைப் பல மடங்கு அதிகரித்துள்ளது.

ஊரடங்கு கடைசி ஆயுதம்
மக்களைப் பாதிக்காத வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் மோடி மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியிருந்தார். மக்களின் வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கப்படும் என்பதால் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு என்பது கடைசி ஆயுதமாகவே இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அல்லது அதற்கு இணையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்ட்
ஒரு நாட்டில் கொரோனா காரணமாக ஊரடங்கு அல்லது கட்டுப்பாடுகள் எந்தளவுக்கு விதிக்கப்பட்டுள்ளது என்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு ஆக்ஸ்போர்ட் கொரோனா வைரஸ் டிராக்கர் மதிப்பெண்களை வெளியிடும். அதாவது ஒரு நாட்டில் அல்லது பிராந்தியத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தால் இந்த மதிப்பெண் 100ஆக இருக்கும். அதேபோல குறைவாக இருந்தால் மதிப்பெண்ணும் குறையும்.

இந்தியாவின் மதிப்பெண்
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி, இந்தியாவிற்கான இதன் மதிப்பெண் 58 ஆக இருந்தது. ஆனால், ஏப்ரல் 30ஆம் தேதி இது 74 ஆக அதிகரித்துள்ளது. மே மாதத்தில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களும் ஊரடங்கு உள்ளிட்ட விதிகளை அறிவித்துள்ளதால், இந்த மதிப்பெண் அடுத்து அப்டேட் செய்யப்படும்போது, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, இது 100ஆக இருந்தது.

98% மக்கள்
மாநில வாரியாக பார்க்கும்போது, நாட்டில் 28 மாநிலங்களிலும் எட்டு யூனியன் பிரதேசங்களிலும் எதோ வகையிலான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. சில மாநிலங்களில், வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், நாட்டிலுள்ள 98% மக்கள் ஊரடங்கு அல்லது எதாவது ஒரு வகை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர்.

வாரியான
தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், பீகார், உத்தரப் பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத், தெலங்கானா, அசாம், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நேரக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அதேபோல திரிபுரா, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், காஷ்மீர், லடாக் போன்ற மாநிலங்களில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Array
அதேபோல முழு ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு சில மாநிலங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் ரேசன் அட்டைதாரர்களுக்குப் பணமும் உணவுப் பொருட்களும் வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களும் விரைவில் இதேபோன்ற அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications