பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட பேச்சுவார்த்தை.. ராகுல்காந்தி அதிரடி
டெல்லி: ‛‛பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவது குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது'' என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கூறினார்.
டெல்லியில் இன்று திடீரென்று ராஷ்ட்ரீய ஜனதாதாளம் கட்சியின் சரத் யாதவை அவரது வீட்டில் காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி சந்தித்து பேசினார்.
அப்போது ராகுல்காந்தி அவரிடம் நலம் விசாரித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு ராகுல்காந்தி நிருபர்களிடம் பேசியதாவது:

நாடு பிளவுப்படுகிறது
நாடு வலுப்பெற வேண்டுமானால், நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ வேண்டியது அவசியமாகும். சரத் யாதவ் கூறியது போல் நாடு மோசமான நிலையில் உள்ளது. நாட்டில் வெறுப்பு பரப்பப்பட்டு நாடு பிளவுப்படுகிறது. நாட்டில் வெறுப்பு பரப்பப்பட்டு நாடு பிளவுபடுகிறது. தேசத்தை ஒன்றிணைத்து, நமது வரலாற்றின் ஒரு அங்கமான சகோதரத்துவத்தின் பாதையில் நாம் நடக்க வேண்டும்வெறுப்பை பரப்புவதன் மூலமும், மக்களை அச்சுறுத்தி கொல்வதன் மூலமும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என்று பாஜகவினர் நினைக்கிறார்கள். நாடு வலுப்பெற வேண்டுமானால், நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ வேண்டியது அவசியமாகும். சரத் யாதவ் கூறியது போல் நாடு மோசமான நிலையில் உள்ளது. நாட்டில் வெறுப்பு பரப்பப்பட்டு நாடு பிளவுப்படுகிறது. நாட்டில் வெறுப்பு பரப்பப்பட்டு நாடு பிளவுபடுகிறது. தேசத்தை ஒன்றிணைத்து, நமது வரலாற்றின் ஒரு அங்கமான சகோதரத்துவத்தின் பாதையில் நாம் நடக்க வேண்டும்வெறுப்பை பரப்புவதன் மூலமும், மக்களை அச்சுறுத்தி கொல்வதன் மூலமும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் என்று பாஜகவினர் நினைக்கிறார்கள்.

உண்மையை மறைத்த பாஜக
கடந்த 2, 3 ஆண்டுகளில் பாஜக தலைவர்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் உண்மையை மறைத்துவிட்டனர். தற்போது மெல்ல மெல்ல உண்மை வெளிவருகிறது. இதுதான் இலங்கையில் நடந்தது. இந்தியாவின் பொருளாதார நிலை மற்றும் வேலை வாய்ப்பு என்பது நீங்கள் கற்பனை செய்து பார்க்க இயலாத அளவுக்கு மோசமாக உள்ளது. நாட்டில் வேலைவாய்ப்பு வழங்கும் முதுகெலும்பாக இருந்த சிறு, குறு, நடுத்தர தொழில் கட்டமைப்புகள் உடைக்கப்பட்டு விட்டன.

4 ஆண்டுகளில் முடிவு
பொருளாதார நிபுணர்களும், அதிகாரிகளும் பிற நாடுகளைப் பார்த்துத் தங்கள் திட்டங்களைத் தீட்டுகிறார்கள். அவர்களை போல் நாம் இருக்க வேண்டும் என பிரதமர் கூறுகிறார். அது ஒருபோதும் முடியாது. முதலில், நாம் யார், இங்கே என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தற்போதைய மோசமான நிலையின் முடிவுகள் 3 முதல் 4 ஆண்டுகளில் வெளிவரும்.

மறுக்கும் மத்திய அரசு
உக்ரைனை தனி நாடாக ரஷ்யா ஏற்கவில்லை. டொனெஸட்ஸ்க் லுஹன்ஸ்க் பகுதிகளை உக்ரைன் உரிமை கொண்டாட முடியாது. அமெரிக்கா, நேட்டோ படைகளுடனான உக்ரைன் கூட்டணியை ரஷ்யா உடைக்க துடிக்கிறது. இதுதான் படையெடுப்பின் முக்கிய காரணம். இதுதான் நமக்கும் நடக்கிறது. லடாக், அருணாசலப்பிரதேசம் இந்தியாவுக்கு சொந்தமல்ல என சீனா கூறுகிறது. 2 இடங்களிலும் வீரர்களை குவித்துள்ளது. இதை கூறினால் மத்திய அரசு ஏற்க மறுக்கிறது. உக்ரைன் ரஷ்ய விவகாரம் இந்தியாவுக்கும் பொருந்தும்.

ஓரணியில் திரட்ட பேச்சுவார்த்தை
எதார்த்தத்தை ஏற்று எதற்கும் தயாராக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான சூழ்நிலை வரும்போது எதிர்கொள்ள முடியாமல் போய்விடும். இதனால் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவது குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது'' என்றார். பாஜகவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் னெ மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் கூறி வந்த நிலையில் தற்போது ராகுல்காந்தியும் தெரிவித்துள்ளார். மேலும், பேச்சுவார்த்தையும் நடக்கிறது என ராகுல் கூறியுள்ளதால் தேசிய அரசியலில் பாஜகவை எதிராக பெரும் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

யார் இந்த சரத் யாதவ்
இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி நியமிக்கப்பட வேண்டும் என சரத் யாதவ் விருப்பம் தெரிவித்தார். அதற்கு ராகுல்காந்தி பார்க்கலாம் என பத்திரிகையாளர்களிடம் பதிலளித்தார். பீகார் முதல்வரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் சரத்யாதவ் செயல்பட்டு வந்தார். பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியே வந்தவர் லோக் தந்திரிக் ஜனதாதளம் என்ற கட்சியை 2018ல் துவக்கினார். அதன்பின் கடந்த மாதம் லால் பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியுடன் தனது கட்சியை சரத் யாதவ் இணைத்தார். கடந்த மாதம் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது மத்தியில் பாஜகவை எதிர்க்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க உதவி செய்வதாக சரத் யாதவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் ராகுல்காந்தி, சரத் யாதவை, ராகுல்காந்தி சந்தித்து இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications