தொடரும் தற்கொலைகள்... எதிர்ப்புகள்- அடுத்த ஆண்டு மே 5-ல் நீட் தேர்வு; ஜூன் 2-வது வாரம் ரிசல்ட்!
டெல்லி: 2024-ம் ஆண்டு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுகள் மே 5-ந் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 2-வது வாரத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் நீட் நுழைவுத் தேர்வானது அகில இந்திய பாடங்கள் (சிபிஎஸ்இ உள்ளிட்டவை) அடிப்படையில் மட்டுமே நடத்தப்படுகிறது. இதனால் மாநில பாடத் திட்டங்களில் படித்து அதிக மதிப்பெண்களை பெற்றாலும் நீட் நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாத நிலையில் அம்மாணவர்களின் மருத்துவ கனவு சாகடிக்கப்படுகிறது.

இதனால் மனம் நொந்து போன அரியலூர் அனிதா தொடங்கி தாம்பரம் ஜெகதீஷ் வரை எண்ணற்ற மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிற பேரவலம் தமிழ்நாட்டில் தொடருகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தர கோரி சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தர கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் தேர்வு பயிற்சி முகாம்கள் சிறை கூடங்கள் போல நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி இந்த ஆண்டு மட்டும் 24 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான பொது கருத்து நிலவுகிறது.
ஆனாலும் தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நீட் தேர்வை எதிர்ப்புகளுக்கு இடையே நடத்தி வருகிறது. 2024-ம் ஆண்டு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுகள் மே 5-ந் தேதி நடத்தப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 2-வது வாரம் வெளியிடப்பட உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications