நீட் தேர்வு எழுத இன்னும் அப்ளை பண்ணலையா?இன்றே கடைசி..மிஸ் பண்ணாதீங்க ஸ்டுடண்ஸ்
டெல்லி : இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும் கூடுதல் தகவல்களுக்கு nta.nic.in என்ற இணைய தளத்தில் அறிந்துக் கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ஆணையம் நடத்தி வருகிறது.

தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல ஆண்டு காலமாக எழுந்து வரும் நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதியினை தேசிய தேர்வு முகமை அறிவித்தது.எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடக்கிறது.
அதன்படி 2023-2024ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் எழுதலாம். இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 6ஆம் தேதி தொடங்கிய நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும் கூடுதல் தகவல்களுக்கு nta.nic.in என்ற இணைய தளத்தில் அறிந்துக் கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
திமுக எதிர்கட்சியாக இருந்த போது நீட் தேர்வுக்கு விலக்கு கோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது. நீட் தேர்வினை ரத்து செய்வதற்கான ரகசியம் தங்களிடம்தான் இருக்கிறது என்று கூறி வாக்கு சேகரித்தார் உதயநிதி ஸ்டாலின். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு ஆண்டுகள் மாணவர்கள் நீட் தேர்வுகள் எழுதியே மருத்துவ படிப்புகளில் சேர்ந்தனர்.
தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நூற்றுக்கணக்கான அரசுப்பள்ளியில் பயின்ற ஏழை மாணவர்கள் மருத்துவர்களாக சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு தமிழகத்தில் மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்த ஆண்டும் மாணவர்கள் நீட் தேர்வு எழுதித்தான் மருத்துவ படிப்புகளில் சேர வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications