டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் இன்று கடற்படை தளபதிகளின் 3 நாட்கள் மாநாடு தொடக்கம்- ராஜ்நாத்சிங் பங்கேற்பு

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டின் கடற்படை தளபதிகளின் மாநாடு இன்று முதல் நாளை மறுநாள் வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்கிறார்.

எல்லையில் சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக சீனாவுடன் பல்வேறு நிலைகளிலான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

Naval Commanders’ Conference of 2020 to begin in Delhi from today

இந்த நிலையில் டெல்லியில் கடற்படை தளபதிகளின் மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இராணுவத் தளவாடங்கள், போக்குவரத்து, மனித ஆற்றல் மேம்பாடு, பயிற்சி, நிர்வாகச்செயல்பாடுகள் ஆகியவற்றைக் குறித்தும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் கடற்படை தளபதிகளுடன் தலைமை தளபதி உரையாட உள்ளார்.

ஒருநாள் கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் இந்தியா முதலிடம்- 24 மணிநேரத்தில் 65,022 பேருக்கு தொற்று ஒருநாள் கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் இந்தியா முதலிடம்- 24 மணிநேரத்தில் 65,022 பேருக்கு தொற்று

மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்று கடற்படைத் தளபதிகளிடையே உரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் கடற்படைத் தளபதிகள், இதர மூத்த அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடுகின்றனர்.

இந்திய பசிபிக் பகுதியில் அதிக அளவிலான பாதுகாப்பின் தேவைகள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

Recommended Video

    சீனா மீது பொருளாதார ரீதியாக நடவடிக்கைகள் எடுக்க இந்தியா திட்டம்?

    English summary
    The Naval Commanders’ Conference of 2020 is scheduled atNew Delhi from 19 to 21Aug 20. The Conference is the apex level event for interaction between the Naval Commanders.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X