'வரலாற்றின் இருண்ட காலங்கள்..' முகலாயர்கள் பற்றிய NCERT-இன் புதிய 8ம் வகுப்பு புத்தகத்தால் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இப்போது எட்டாம் வகுப்பிற்கான புதிய சமூக அறிவியல் புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறது. அதில் டெல்லி சுல்தான்கள் மற்றும் முகலாயர் காலம் குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ள சில கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் புதிய 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அதில் 13 முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையிலான இந்திய வரலாற்று குறித்த தகவல்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. Exploring Society: India and Beyond என்ற அந்தப் பாடத்தில் டெல்லி சுல்தான்கள் மற்றும் முகலாயர் காலம் குறித்து இடம் பெற்றிருக்கும் கருத்துகளை விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

NCERT Class 8 Textbook Revises Mughal History Scrutinizes Akbar Babur Aurangzeb

புதிய பாடங்கள்

முந்தைய பதிப்புகளில் இல்லாத சில புதிய தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அந்தக் காலகட்டத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் கொடுமை மற்றும் மத சகிப்பின்மை நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக 'வரலாற்றில் சில இருண்ட காலங்களைப் பற்றிய குறிப்பு' என்ற தலைப்பில் ஒரு பாடம் உள்ளது. அதில் வன்முறை, கோவில் அழிப்பு மற்றும் அந்த நூற்றாண்டுகளில் அரசியல் ஒடுக்குமுறைகள் என்று சில கருத்துகள் இடம்பெற்று இருக்கிறது.

சர்ச்சை கருத்துகள்

இந்தியாவின் அரசியல் வரைபடத்தை மாற்றியமைத்தல் என்ற அந்த அத்தியாயத்தில் டெல்லி சுல்தான்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி, உள்ளூர் சக்திகளின் எதிர்ப்பு, விஜயநகர பேரரசு, முகலாய சகாப்தம், மராட்டியர்கள் மற்றும் சீக்கியர்களின் தோற்றம் ஆகியவை குறித்த கருத்துகளைக் கொண்டு இருக்கிறது.. அலாவுதீன் கில்ஜியின் ஜெனரல் மாலிக் கபூரைப் பற்றிய பத்தியில், அவர் மதுரை, ஸ்ரீரங்கம் மற்றும் சிதம்பரம் போன்ற இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தியதாகப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய ஜிஸ்யா வரி குறித்த கருத்துகளும் இடம்பெற்று இருக்கிறது.

முதல் முகலாய பேரரசர் பாபர் முழு மக்கள் தொகையையும் அழித்ததாகவும் மனித எலும்புக் கூடுகளை வைத்து கோபுரங்களைக் கட்டியவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் பொதுமக்கள் அடிமைப்படுத்தப்பட்டனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்பரின் ஆட்சி கொடுமை மற்றும் சகிப்புத்தன்மையின் கலவையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அவுரங்கசீப் கோயில்களையும் குருத்வாராக்களையும் இடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்சிஆர்டி

அதேநேரம் இவை எல்லாம் வரலாற்று நிகழ்வுகள் தான் என்றும் எந்தவொரு தற்போதைய சமூகமோ அல்லது தனிநபரோ இந்த வரலாற்று நிகழ்வுகளுக்குப் பொறுப்பேற்க முடியாது என்ற குறிப்பும் அதில் இடம் பெற்றுள்ளது. மாணவர்களுக்கு வரலாற்றைப் பற்றிய நேர்மையான மற்றும் அடிப்படை புரிதலை வழங்குவதே இதன் நோக்கம் என்று என்சிஆர்டி கூறுகிறது. மறுபுறம் சிவாஜி பற்றிய சில கருத்துகளும் இதில் இருகக்கிது. சிவாஜியும் மராட்டியர்களும் கோயில்களை மீண்டும் கட்டியெழுப்பிய மற்றும் பிற மதங்களை மதித்த தலைவர்களாக இருந்ததாக இந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்சிஆர்டி விளக்கம்

தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023ஐ பின்பற்றும் வகையில் இந்த பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக NCERT தெரிவித்துள்ளது. மேலும், முன்பு 8ஆம் வகுப்புக்கு வரலாறு, அரசியல் அறிவியல் மற்றும் புவியியல் ஆகிய மூன்று தனித்தனி புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில், இப்போது அது ஒருங்கிணைந்த புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது.

என்சிஇஆர்டி அமைப்பின் இந்தப் புத்தகத்திற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். என்சிஇஆர்டி-இன் இந்தப் புத்தங்கள் ஒருதலைப்பட்சமாக இருப்பதாக விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+