என்டிஏ கூட்டணியில் மோடியின் 3.O சர்கார்.. எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர் பதவி.. லிஸ்ட் இதோ
டெல்லி: லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து மோடி மூன்றவாது முறையாக பதவியேற்றுக்கொண்டார். என்டிஏ கூட்டணியில் மோடியின் புதிய அமைச்சரவையில், எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர் பதவி கொடுகப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. 543 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை பெற 272 இடங்களில் வெற்றி பெறுவது அவசியம். கடந்த இரண்டு லோக்சபா தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மை பெற்ற நிலையில், 18-வது லோக்சபா தேர்தலில் 240 இடங்களை மட்டுமே பெற்றது.

இதனால், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைத்துள்ளது. பிரதமராக நேற்று மோடி பதவியேற்றுக்கொண்ட நிலையில், அவருடன் அமைச்சர்களாக 71 பேரும் பதவியேற்றுக்கொண்டனர். இதில், ரஜ்நாத் சிங், அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்பட கேபினட் அமைச்சர்களாக 30 பேர் பதவியேற்றுக்கொண்டனர்.
தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக 5 பேரும், இணை அமைச்சர்களாக 36 பேரும் பதவியேற்றுக்கொண்டனர். மோடி அமைச்சரவையில் இந்த முறை புதுமுகங்கள் பலருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இளம் அமைச்சராக 36 வயதுடைய தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராம் நாயுடு பதவியேற்றுள்ளார். கட்சி வாரியாக பார்த்தோம் ஆனால் பாஜகவை சேர்ந்த 61 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கட்சி வாரியாக: அதேபோல கட்சி வாரியாக பாரத்தால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பாஜகவை சேர்ந்த 61 பேர் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளார்கள். ஆந்திராவில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியில் இருந்து கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு, சந்திர சேகர் பெம்மசானி ஆகிய இருவருக்கு இடம் கிடைத்துள்ளது.
பிரதமர் மோடி கேபினட் 3.O.. எந்தெந்த மாநிலங்களில் எத்தனை அமைச்சர்கள்? முழு டேட்டா இதோ
அதேபோல, என்டிஏவில் மற்றொரு பெரிய கட்சியான ஐக்கிய ஜனதா தளம் -கட்சியில் இருந்து ராம்நாத் தாக்குர், பி.எல்.வெர்மா ஆகியோர் மத்திய அமைச்சர்கள் ஆகியுள்ளனர். அதுபோக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் ஒருவர் இடம் பிடித்துள்ளார். பிரதாப்ராவ் ஜாதவ் நேற்று அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
அதேபோல, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில், எச்.டி. குமாரசாமி, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியில் ஜித்தன் ராம் மஞ்சி, இந்திய குடியரசுக் கட்சி (அத்வாலே) யில் ராம்தாஸ் அத்வாலே, லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) கட்சியை சேர்ந்த சிராக் பஸ்வான்,
2014, 2019 மாதிரி இல்லையே "மோடி 3.0.." பாஜகவினரே எதிர்பார்க்கல.. அமைச்சரவையில் இதை கவனிச்சீங்களா?
ராஷ்டிரீய லோக் தளம் கட்சியின் ஜெயந்த் சவுதாரி, அப்னா தளம் கட்சியின் சந்திரசேகர் சவுதாரி ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்தக் கட்சிகளுக்கு தலா ஒரு இடம் மட்டுமே மத்திய அமைச்சரவையில் கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications