சண்டை போட்டு அதிக சீட் வாங்கி என்ன யூஸ்? தேஜஸ்வியை கீழே இழுக்கும் காங்கிரஸ்! பீகார் புதிய சர்வே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீகாரில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு எந்தக் கட்சி வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து முக்கியமான சர்வே இப்போது வெளியாகியுள்ளது. MATRIZE-IANS அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த சர்வேயில் என்டிஏ கூட்டணியின் கை ஓங்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான முதல் கட்ட பிரச்சாரம் முடிவுக்கு வந்துள்ளது. அங்கு நாளை மறுநாள் அதாவது நவம்பர் 6ஆம் தேதி 121 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பீகாரை பொறுத்தவரை இப்போது அங்கு என்டிஏ கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இது தவிர அங்கு பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தனித்துப் போட்டியிடுகிறது.

NDA has a clear Leads over INDIA in Bihar election Nitish Kumar shines as CM candidate IANS survey

பீகார் தேர்தல்

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் ஒரு கட்சி அல்லது கூட்டணி ஆட்சியை அமைக்கக் குறைந்தபட்சம் 122 இடங்களில் வெல்ல வேண்டும். இந்த முறை இரு தரப்பிற்கும் இடையே போட்டி மிகக் கடுமையாக இருப்பதால் பல தொகுதிகளில் சில நூறு வாக்குகளே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே வாக்குப்பதிவுக்கு முன்னதாக MATRIZE-IANS அமைப்புகள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் போட்டி கடுமையாக இருந்தாலும் என்டிஏ கூட்டணி எளிதாகப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் வெல்வார்கள்?

பீகாரில் இந்த முறை என்டிஏ கூட்டணி 153-164 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக ஐஏஎன்எஸ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேஜஸ்வி யாதவ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 76 முதல் 87 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் அங்குள்ள அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் ஜன் சுராஜ் கட்சி வெறும் 1 முதல் 3 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஓவைசி தலைமையிலான மஜ்லீஸ் கட்சி 1-2 இடங்களிலும் பிற சிறிய கட்சிகள் 0 முதல் 4 இடங்களிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.

தனிப்பெரும் கட்சி

அதேபோல என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்தனியாக எத்தனை சீட்களில் வெல்லும் என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. என்டிஏ கூட்டணியில் பாஜக 83 முதல் 87 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவும் ஜேடியு கட்சியும் சம அளவு இடங்களிலே போட்டியிட்டாலும் கூட நிதஷின் ஜேடியு 61-65 இடங்களில் மட்டுமே வெல்லும் என கூறப்பட்டுள்ளது. இது தவிர லோக் ஜனசக்தி கட்சி மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலா 4- 5 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஒன்று முதல் இரு இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணி

எதிர்க்கட்சி கூட்டணியில் ஆர்ஜேடி அதிகபட்சமாக 62-66 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. தேஜஸ்வியிடம் சண்டை போட்டு 61 இடங்களைக் கேட்டு வாங்கிய காங்கிரஸ் 7-9 இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், கம்யூனிஸ்ட் (ML) கட்சி 6 முதல் 8 இடங்கள், இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 0-1 இடம், விஐபி கட்சி 1-2 இடங்களில் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை என்டிஏ கூட்டணிக்கு மொத்த வாக்குகளில் 49% கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.. மறுபுறம் இந்தியா கூட்டணிக்கு 38% மட்டுமே வாக்குகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் 13% வரை வாக்குகளைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

முதல்வர் பதவி யாருக்கு?

யார் முதல்வர் பதவிக்கு சரியா நபராக இருப்பார் என்ற கேள்விக்கு நிதிஷ் குமாருக்கே மிக பெரிய ஆதரவு இருக்கிறது. 46% மக்கள் நிதிஷ் குமாரே சரியான நபராக இருப்பார் என தெரிவித்துள்ளனர். அவரை தொடர்ந்து தேஜஸ்வி யாதவ் 2வது இடத்தில் வந்தாலும் அவருக்கு 15% மட்டுமே ஆதரவு இருக்கிறது. அதைத் தொடர்ந்து சிராக் பாஸ்வான் மற்றும் பிரசாந்த் கிஷோர் ஆகியோருக்கு தலா 8% ஆதரவு உள்ளது. தற்போதைய துணை முதல்வரும் பாஜக தலைவருமான சாம்ராட் சவுத்ரிக்கு வெறும் 4% ஆதரவு மட்டுமே இருப்பதாக MATRIZE-IANS அமைப்புகள் இணைந்து நடத்திய சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+