'நீட் தேர்வு' 1.4 லட்சம் இடங்களுக்கு 20 லட்சத்திற்கும் மேல் விண்ணப்பம்.. தமிழ்நாட்டில் எத்தனை பேர்?
டெல்லி: நாடு முழுவதும் இளங்களை மருத்துவ படிப்புகளுக்கான எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் இடங்கள் 1.4 லட்சம் உள்ள நிலையில், நடப்பு ஆண்டில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் எத்தனை பேர் என்ற விவரமும் வெளியாகி இருக்கிறது.
நாட்டின் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இளங்கலை, முதுகலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இளங்கலை, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தனித்தனியே நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றது. தற்போது மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுகிறது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து, ஏப்ரல் 15 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், இந்த தேர்வுக்கு எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளார்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, நீட் தேர்வுக்கு நடப்பு ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 20.8 லட்சம் மாணவ மாணவிகள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். கடந்த ஆண்டை விட இது 2.57 லட்சம் அதிகமாகும். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் விண்ணப்பித்து இருக்கிறார்கள். 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவிகளும் 9 லட்சத்து 02 ஆயிரத்து 930 மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படியில் ஒபிசி பிரிவு மாணவர்கள் 8.9 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
மாநில வாரியாக அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். மகராஷ்டிர மாநிலத்தில் 2.77 லட்சம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். உத்தர பிரதேசத்தில் 2.73 லட்சம் பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இருக்கிறார்கள். ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நீட் தேர்வுக்கு தயாராக கூடுதல் அவகாசம் வேண்டும் எனவும் இதனால் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
எனினும், நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் ஏற்கனவே அறிவித்த தேதியில் தேர்வு நடைபெறும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அதிகரித்தாலும், கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி இந்த தேர்வு நடைபெறும் முந்தைய ஆண்டுகளில் இதுபோலத்தான் நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications