நீட் விவகாரத்தில் அதிரடி.. கருணை மதிப்பெண்கள் ரத்து! பாதிக்கப்பட்டவர்களுக்கு மறு தேர்வு நடத்த முடிவு
டெல்லி: நீட் தேர்வு எழுதியவர்களில் 1,500-க்கும் அதிகமானோருக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக 20,000 மாணவர்களிடம் கையொப்பம் பெற்று அலக் பாண்டே என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது 1,563 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த தயார் என்று தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தேர்வின் மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு 4,750 மையங்களில் கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 23 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

13 மொழிகளில் 720 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடந்தது. இந்த நிலையில் தேர்வு முடிந்த ஓரிரு நாட்களிலேயே நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததாக இணையதளத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்களை மறுத்த தேசிய தேர்வு முகமை எந்த ஒரு வினாத்தாள் கசிவையும் சமூக ஊடக பதிவுகள் எல்லாமே அடிப்படை ஆதாரமற்றவை என தெரிவித்திருந்தது. ஒவ்வொரு கேள்வித்தாளுக்கும் கணக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஜூன் 4 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு சரியான விடை என்றால் 4 மதிப்பெண்களும் தவறான பதிலுக்கு 4 மதிப்பெண்கள் + 1 மதிப்பெண் என 5 மதிப்பெண்கள் மைனஸ் செய்யப்படும் இப்படி பார்த்தால் அனைத்து கேள்விகளுக்கு சரியாக விடையளித்தவர்களுக்கு 720 மதிப்பெண்கள் கிடைக்கும்.
அது போல் ஒரே ஒரு கேள்விக்கு தவறாக பதில் அளித்திருந்தால் 5 மதிப்பெண்கள் கழிக்கப்பட்டு 715 மதிப்பெண்கள்தான் கிடைத்திருக்கும். ஆனால் இந்த ஆண்டு சில மாணவர்கள் 719, 718 என மதிப்பெண்களை பெற்றதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்த தேசிய தேர்வு முகமை, "தேர்வு நேரத்தில் சில நிமிடங்கள் ஏதேனும் காரணங்களால் நேரம் வீணானால், அதற்கு ஈடாக கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு மட்டும் அத்தகைய சலுகை வழங்கப்பட்டது" என்று தெரிவித்தது. ஆனால், யார் யார் விண்ணப்பித்தனர், எதன் அடிப்படையில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன என தேசிய தேர்வு முகமை விளக்கம் அளிக்கவில்லை.
இதற்கிடையே நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும் மறு தேர்வு நடத்த வேண்டும் எனவும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தான், நீட் தேர்வு எழுதியவர்களில் 1,500-க்கும் அதிகமானோருக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக 20,000 மாணவர்களிடம் கையொப்பம் பெற்று அலக் பாண்டே என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நீட் தேர்வு எழுதியவர்களில் 1,500-க்கும் அதிகமான தேர்வர்களுக்கு தேசிய தேர்வு முகமை தன்னிச்சையாக 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண் வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தை தெளிவுபடுத்தும் வரை, கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று தனது மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது நீட் தேர்வு விவகாரத்தில், பாதிக்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு மறு நுழைவுத் தேர்வு நடத்த தயார் என்று தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தது. இதேபோல் தேர்வு எழுத விருப்பப்படும் மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்றும், தேர்வு எழுத விருப்பப்படாத மாணவர்களுக்கு பழைய மதிப்பெண்ணே தொடரும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கவுன்சிலிங்க் பாதிக்கப்படாதவாறு நீட் மறு தேர்வை விரைவாக நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். மேலும் கருணை மதிப்பெண்களை தவிர்த்து மற்ற மாணவர்கள் எழுப்பும் மற்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
1,563 மாணவர்களுக்கு வருகிற 23 ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் எனவும் 30-ந்தேதி முடிவுகள் வெளியாகும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இந்த மறு தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் எழுதலாம் என்றும் மறுதேர்வு எழுத விரும்பாத மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் இல்லாமல் அவர்கள் பெற்ற பழைய மதிப்பெண்ணே தொடரும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மறு தேர்வு நடத்த உச்ச நீதிமன்றமும் அனுமதி கொடுத்துள்ளது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications