மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை: நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளுடன் நீட் நுழைவுத் தேர்வு!
டெல்லி: நாடு முழுவதும் இன்று கடும் கட்டுப்பாடுகளுடன் 18.72 லட்சம் மாணவர்கள் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதி வருகின்றனர்
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவ படிப்புக மாணவர் சேர்க்கைக்காக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் நுழைவுத் தேர்வு ஏழை, கிராமப்புற மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை சிதைக்கிறது என்பது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் கருத்து.

நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு தர வேண்டும் என்பது தமிழகத்தின் கோரிக்கை. இது தொடர்பாக சட்டசபையில் 2 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் அது ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
மேலும் நீட் தேர்வு அழுத்ததால் தற்கொலை செய்து கொள்கிற மாணவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அரியலூர் அனிதாவில் தொடங்கிய நீட் தேர்வு தற்கொலைகள் இன்று வரை நீடிக்கிறது. அரியலூரில் மற்றொரு மாணவி, நிஷாந்தி நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இன்று பிற்பகல் நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5.20 மணிவரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சுமார் 18.72 லட்சம் மாணவர்கள் இந்த நீட் தேர்வை எழுத உள்ளனர். தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு சுமார் 1.42 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள், ஹால் டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள அனைத்து அறிவுரைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பல மாநிலங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது; அதேபோல் நீட் நுழைவுத் தேர்வு மையங்களும் வெவ்வேறு மாநிலங்களிலும் போடப்பட்டுள்ளது. அத்துடன் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளும் அடுத்தடுத்து நடைபெற உள்ளது. இதனால் நீட் நுழைவுத் தேர்வை சில வாரங்களுக்கு ஒத்திவைக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அண்மையில் 15 மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். ஆனால் டெல்லி உயர்நீதிமன்றம் இதனை ஏற்க மறுத்து அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications