நீட் முறைகேடுகள் குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு: லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு!
டெல்லி: நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அனைவரும் கூண்டோடு வெளிநடப்பு செய்தனர். லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை ஒத்தி வைத்து நீட் முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
18-வது லோக்சபா கூட்டத் தொடரின் 6-வது நாள் இன்று. லோக்சபா இன்று காலை கூடிய போது டி 20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா வாசித்தார். இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். ஆனால் இதற்கு லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி தரவில்லை. மேலும் லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது குறித்தும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு விளக்கம் அளித்த சபாநாயகர் ஓம் பிர்லா, தாம் மைக் இணைப்பை துண்டிக்கவில்லை. தம்மிடம் அந்த சுவிட்ச் இல்லை என்றார்.

இதனைத் தொடர்ந்தும் நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், நாடாளுமன்றத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறோம். நாடாளுமன்றதுக்கு நீட் விவகாரமும் முக்கியம் என்ற செய்தியை மாணவர்களுக்கு சொல்ல வேண்டும். ஆகையால்தான் நீட் முறைகேடுகள் குறித்து ஒருநாள் விவாதிக்க வேண்டும் என்கிறோம் என்றார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற கூட்டமானது சில மரபுகள், விதிகளின்படிதான் நடைபெறுகிறது. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பின்னரே எந்த விவாதமும் நடத்தப்பட வேண்டும். என்றார். அப்போதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து நீட் முறைகேடுகள் குறித்து விவாதிக்க கோரினர். ஆனாலும் சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். இதனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் நீட் தேர்வு முறைகேடுகள் உள்ளிட்டவைகளைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். இதில் திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications