ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 8 பேர் முதலிடம்.. நீட் தேர்வில் குளறுபடியா? கலங்கும் மாணவர்கள்
டெல்லி: ஹரியானாவில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் நீட் எக்ஸாம் எழுதியவர்களில் 8 பேர் முதலிடம் பெற்றவர்கள் பட்டியலில் உள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பல்வேறு கவலைகளை எழுப்புவதாக அமைந்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளில் 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது. நீட் தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு உள்ளது. தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கும்படி தொடர்ந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.

நீட் தேர்வு: இந்த நிலையில் தான், 2024 - 25 ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 571 நகரங்களில் 13 மொழிகளில் கடந்த மாதம் 5 ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வை 10 லட்சத்து 29 ஆயிரத்து 154 ஆண்கள், 13 லட்சத்து 76 ஆயிரத்து 831 பெண்கள், 18 திருநங்கைகள் என மொத்தம் 24 லட்சத்து 6 ஆயிரத்து 79 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். இது கடந்த ஆண்டைவிட 16.85 சதவீதம் பேர் அதிகமாக விண்ணப்பித்தனர்.
அவர்களில், 9 லட்சத்து 98 ஆயிரத்து 298 ஆண்கள், 13 லட்சத்து 34 ஆயிரத்து 982 பெண்கள், 17 திருநங்கைகள் என மொத்தம் 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 பேர் தேர்வை எழுதினார்கள். இவர்களுக்கான தேர்வு முடிவு ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் என தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை தெரிவித்து இருந்தது. ஆனால் நேற்று இரவு திடீரென்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
56.4 சதவீதம் பேர் தேர்ச்சி: 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 பேர் எழுதிய தேர்வில், 5 லட்சத்து 47 ஆயிரத்து 36 ஆண்கள், 7 லட்சத்து 69 ஆயிரத்து 222 பெண்கள், 10 திருநங்கைகள் என 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 56.4 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர். மொத்தம் 13 மொழிகளில் நீட் தேர்வு நடந்தது.
இதில் அதிகபட்சமாக ஆங்கில மொழியில் 18 லட்சத்து 92 ஆயிரத்து 355 பேர் எழுதி இருந்தனர். அதற்கடுத்தபடியாக இந்தி மொழியில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 908 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் தமிழில் எழுத 36 ஆயிரத்து 333 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். தமிழ் மொழியில் தேர்வு எழுதும் தேர்வர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.
8 பேர் முதலிடம்: 'நீட்' தேர்வு 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. இதில் முதல் 100 இடங்களை பெற்றவர்களில் 67 பேர் ஒரே மாதிரியான மதிப்பெண்ணை எடுத்து முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதேபோல், 720 மதிப்பெண் முதல் 164 மதிப்பெண் வரை 11 லட்சத்து 65 ஆயிரத்து 904 பேர் எடுத்து இருக்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி இருக்கும் நிலை உள்ளது.
இதனிடயே நீட் தேர்வில் ஒரே மையத்தில் 8 பேர் முதலிடம் பெற்று இருப்பதாகவும் முறைகேடு இருக்கக் கூடும் என்ற ரீதியில் தனது கவலையை சமூக வலைத்தளத்தில் நெட்டிசன் ஒருவர் தரவுகளுடன் பதிவிட்டுள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- ஒரு லட்சம் எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.
ஒரே தேர்வு அறையில்: 13.6 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளார்கள். மொத்த மதிப்பெண்களில் 164 தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 22.77 சதவிகிதம் ஆகும். தகுதி மதிப்பெண்ணை இந்த அளவு குறைத்தது ஏன்? எதுவும் யூகிக்க முடிகிறதா? 67 மாணவர்கள் 720/720 எடுத்துள்ளார்கள். இது முன்னெப்போதும் இல்லாத ஒன்று.
அதே போல வழக்கத்திற்கு மாறான ஒன்றாகவும் உள்ளது. தேர்வு நடைமுறை மற்றும் நேர்மை குறித்து கேள்வி எழுப்புகிறது. 2023- ஆம் ஆண்டு 720 / 720 எடுத்த மாணவர்கள் எண்ணிக்கை வெறும் 2 தான். இந்த முறை வழக்கத்திற்கு மாறான முடிவுகள் வந்துள்ளன. அதிக மதிப்பெண்கள் பெற்ற (toppers) 8 பேர் ஹரியானாவில் உள்ள ஒரே தேர்வு அறையில் தேர்வு எழுதியவர்கள் நாடு முழுக்க 550 நகரங்களில் 4,100 தேர்வு மையங்கள் உள்ளன.
தேசிய தேர்வு முகமை விளக்கம்: ஆனால், ஹரியானாவில் உள்ள ஒரு மையத்தில் மட்டும் 8 பேர் முதலிடம் பெற்றுள்ளது கேள்வியை எழுப்புகிறது. சில மாணவர்கள் 718 மற்றும் 719 எடுத்துள்ளார்கள். ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் கொடுக்கப்படுகிறது. தவறான கேள்விக்கு ஒரு நெகட்டிவ் மார்க் வழங்கப்படும். எனவே இந்த குறிப்பிட்ட மதிப்பெண்கள் எடுப்பது என்பது கணிதவியல் ரீதியாக சாத்தியமே இல்லை.
இது குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பிய போது, தேசிய தேர்வு முகமை பலவீனமான பதிலுடன் வருகிறது. loss of time'க்காக கிரேஸ் மார்க் வழங்கியதாக சொல்கிறார்கள். யார் எவ்வளவு நேரம் இழந்தார்கள் என்று எப்படி அவர்கள் அளவிடுகிறார்கள்? இது பற்றி ஒருபோதும் சொல்லவில்லை. சாக்கு போக்கு போல இது தெரிகிறது. கட் ஆப் மதிப்பெண்ணும் அதிமாக உள்ளது.
வினாத்தாள் கசிவு: 660 க்கு கீழே எடுத்த மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெறுவது கடினம். கடந்த ஆண்டில் 600 மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு கூட அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. வினாத்தாள் கசிவு போன்ற வதந்திகளுக்கு நடுவே, இத்தகைய கவலைகளும் நீட் தேர்வின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications