மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி.. அமைதியான முறையில் போராட்டம் தொடரும்.. விவசாயிகள் அறிவிப்பு
டெல்லி: சண்டிகரில் மத்திய அரசுடன் நேற்று நடந்த 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து அமைதியான முறையில் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
டெல்லியில் கடந்த 2020 - 2021 ஆம் ஆண்டுகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு அப்போது கொண்டு வந்த புதிய வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். விவசாயிகளின் இந்த போராட்டம் மத்திய அரசை தனது முடிவில் இருந்து பின்வாங்க வைத்தது. ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடந்தது.

இறுதியில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது. இந்த நிலையில், வேளாண் விலை பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணி என்ற பெயரில் விவசாயிகள் கடந்த 13 ஆம் தேதி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை: பஞ்சாபில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பஞ்சாப் - ஹரியானா இடையிலான ஷாம்பு எல்லையிலும் கனாரி எல்லையிலும் தடுத்து நிறுத்தப்பட்டனர். விவசாயிகளை வர விடாமல் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அதை அகற்ற முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதை கண்டித்து நேற்று விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதனால், ரயில் சேவை பாதிக்கப்படட்து. இதற்கிடையே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. நேற்று இரவில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை சண்டிகரில் நடைபெற்றது.
உடன்பாடு எடப்பட்டவில்லை: மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஸ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் பங்கேற்றனர். விவசாயிகள் தரப்பில் சம்யுக்தா கிஷன் மோர்ச்சா தலைநகர் ஜக்ஜித் சிங் தல்லோல், கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி பொதுச்செயலாளர் சர்வான் சிங் பாந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் பஞ்சாப் முதல்வரும் பங்கேற்றார். இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எடப்பட்டவில்லை.
போராட்டம் தொடரும்: இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா, இன்றைய பேச்சுவார்த்தை நேர்மறையாக இருந்தது. அடுத்த கட்ட ஆலோசனை வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது. இதில் சுமூக தீர்வு எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், அமைதியான முறையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications