இன்று இந்தியா வருகிறார் நேபாள பிரதமர்.. பிரதமர் மோடி, ஜனாதிபதியுடன் சந்திப்பு! என்ன திட்டம்?
டெல்லி : நேபாள பிரதமர் பிரசந்தா, அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் நேபாள பிரதமர் பிரசந்தா.
நேபாள பிரதமர் பிரசந்தா, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று பிற்பகல் 2:50 மணிக்கு வருகிறார். அவருடன் நேபாள அரசின் உயர்மட்டக் குழுவினரும் வருகின்றனர்.

நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தவுள்ளார். பின்னர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசுகிறார்.
பிரதமர் மோடியை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் நேபாள பிரதமர் பிரசந்தா.

இந்த சுற்றுப்பயணத்தின்போது இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை நேபாள பிரதமர் பிரசந்தா சந்தித்துப் பேச உள்ளார்.
தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக உஜ்ஜைன் மற்றும் இந்தூருக்கும் செல்கிறார். சனிக்கிழமை மாலை காத்மண்டுவுக்கு புறப்படுவார். பிரசந்தா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நேபாள பிரதமராக பதவியேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications