நடுவானில் தூங்கும் பைலட்கள்! ஆனந்த் மகேந்திரா போட்ட ஒற்றை ட்வீட்! அப்படியே திரண்டு வந்த நெட்டிசன்கள்
டெல்லி: பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா பைலட்கள் குறித்துப் பகிர்ந்த சர்வே இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.
இப்போது இருக்கும் போக்குவரத்து முறைகளில் மிகவும் பாதுகாப்பானதாக விமான போக்குவரத்து தான் இருக்கிறது. விமானத்தில் விபத்துகள் என்பது மிகவும் அரிதானதாகவே ஏற்படும்.
இதனிடையே கடந்த மாதம் இந்திய விமானிகள் குறித்து வெளியான சர்வே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதில் இந்திய விமானிகள் குறித்துப் பல தரவுகள் கூறப்பட்டு இருந்தது.

விமானிகள்
விமானிகள் பெரும்பாலும் கிளம்பும் போதும், தரை இறங்கும்போதும் மட்டுமே மட்டுமே முழு கண்டிரோலை வைத்து இருப்பார்கள். மற்ற நேரங்களில் ஆட்டோ பைலட் மோடில் தான் போட்டு இருப்பார்கள். நம்மிடம் இப்போது அதிநவீன கருவிகள் இருப்பதால் ஆட்டோ பைலட் மோடில் போட்டாலும் பயணம் பத்திரமாகவே இருக்கும். ஆட்டோ பைலட் மோடில் போட்டாலும் விமானிகள் அருகே தான் இருக்க வேண்டும்.

66% பேர்
இருப்பினும், கடந்த மாதம் வெளியான இந்த சர்வேவில், சுமார் 66% இந்திய விமானிகள் ஆட்டோ பைலட் மோடில் போட்டுவிட்டுத் தூங்கி உள்ளதை ஒப்புக் கொண்டனர். அதுவும் இணை விமானியிடம் சொல்லாமலேயே இப்படிச் செய்து உள்ளனர். சில விமானிகள் பணியில் இருக்கும் போது அவர்களை அறியாமலேயே தூங்கியதாகவும் குறிப்பிட்டு உள்ளனர். மொத்தம் இயக்கும் 542 இந்திய விமானிகளிடம் இந்த சர்வே நடத்தப்பட்டது.

காரணம்
சுமார் 54% விமானிகள் கடுமையான பகல் நேரத் தூக்கத்தாலும் 41% பேர் லேசான பகல் நேரத் தூக்கப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவே விமானிகள் திடீர் திடீரென காக்பேட்டில் தூங்கக் காரணமாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர். இதை அவர்கள் மைக்ரோ-ஸ்லீப் எனக் குறிப்பிடுகிறார்கள். அதிகாலை நள்ளிரவு என மாறி மாறி எழுவதே இதன் பிரச்சினையாக உள்ளது.

ஆனந்த் மகேந்திரா
கடந்த மாதம் வெளியான இந்த சர்வே இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா இந்த சர்வேவை தனது ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். மேலும் அவர், "அருமை.. விமானத்தில் செல்வதற்கு முன் நான் படிக்க வேண்டிய முக்கியமானது" என்று சற்றே கிண்டல் அடிக்கும் வகையில் ட்வீட் செய்து உள்ளார். இது உடனே இணையத்தில் பேசு பொருள் ஆனது.

ஆட்டோ பைலட் பெட்டர்
இதற்குப் பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஒருவர், "சார் கவலை வேண்டாம். ஆட்டோ பைலட் நமது பைலட்களை விடவே மிகச் சிறப்பாக வேலை செய்யும்" என்று கூறி இருந்தார். அதேபோல மற்றொரு நபர், "இதன் காரணமாகவே எப்போதும் ரயில்களே சிறந்தவை" என்றும் ட்வீட் செய்துள்ளார். இன்னும் சிலர் பைலட்டிற்கு வேலைப்பளு அதிகரித்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லியுள்ளார். இப்படி பலரும் பல கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ஷாக் சம்பவம்
விமானிகள் காக்பிட்டில் தூங்கும் சம்பவங்கள் உலகம் முழுவதும் நடக்கவே செய்கிறது. சமீபத்தில் சூடானின் இருந்து எத்தியோப்பியா விமானத்தின் பைலட்கள் இருவருமே தூங்கிவிட்டனர். இதனால் ஏர்போர்டில் விமானம் தரையிறங்கவில்லை. அவர்கள் ஆட்டோபைலட் மோடில் போட்டு இருந்ததால், விமானம் 37,000 அடி உயரத்தில் அங்கேயே சுற்றிக் கொண்டு இருந்தது. அப்போது அலாரம் அடித்ததாலேயே விமானம் பைலட்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications