அத்தனை கூட்டம்.. நடுவே சிறுமி வைத்திருந்த ஜெகநாதர் ஓவியம்! கவனித்த பிரதமர் மோடி! அடுத்து செம சம்பவம்
டெல்லி: மேற்கு வங்கத்தில் பேரணி ஒன்றில் கலந்து கொண்ட போது, கூட்டத்தில் இருந்த ஒரு சிறுமியிடமிருந்து ஜெகநாதர் ஓவியத்தைப் பெற்று கொண்ட வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று பல நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து வருகிறார். மேலும் பல புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி வருகிறார்.

அப்படிதான் பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்திற்குச் சென்றிருந்தார். அங்கே அவர் பாஜக கட்சி நிகழ்ச்சிகளிலும் அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
நரேந்திர மோடி: அதாவது பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்கத்தில் பேரணி ஒன்றில் கலந்து கொண்ட போது, கூட்டத்தில் இருந்த ஒரு சிறுமியிடமிருந்து ஜெகநாதர் ஓவியத்தைப் பெற்றுக் கொண்ட வீடியோவை பாஜகவினர் டிரெண்டாக்கி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் சிறுமியிடம் இருந்து ஜெகநாதர் படத்தைப் பெறும் இந்த வீடியோவை ஆர்எஸ்எஸ் அமைப்பின் எஸ்ஜி சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் மேற்கு வங்கத்தில் நடந்த பேரணியில் பெரும் கூட்டத்தின் நடுவில் படத்தைத் தூக்கிக் காட்டியபடி நின்று கொண்டிருந்த சிறுமியிடம் இருந்து ஓவியத்தைப் பெறுமாறு மேடையில் இருந்த பாதுகாவலரிடம் பிரதமர் மோடி கேட்டுக் கொள்கிறார்.
கவனித்த பிரதமர்: மேற்கு வங்க மாநிலம் ஆரம்பாக் என்ற இடத்தில் நடந்த பேரணியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பேரணியில் கூட்டத்திற்கு நடுவே நின்று சிறுமி ஜெகநாதரின் ஓவியத்தை மேடையை நோக்கிக் காட்டுகிறார்.. அதைப் பிரதமருக்குப் பரிசளிக்க விரும்புவது போல அவர் காட்டுகிறார். சிறிது நேரத்தில் அதைக் கவனித்த பிரதமர் மோடி தனது பாதுகாப்பு அதிகாரியிடம் அந்த ஓவியத்தை வாங்கி வரும்படி கூறுகிறார்.
அதேபோல அந்த பாதுகாப்பு அதிகாரியும் அந்த படத்தை வாங்கி வந்து மோடியிடம் தருகிறார். அதை மேடையிலேயே பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அந்த சிறுமியை நோக்கி நன்றாக இருக்கிறது. இதை வைத்துக் கொள்ளப் போகிறேன் என்பது போலச் சொல்லி நன்றியும் சொல்கிறார். இந்த வீடியோவை தான் இப்போது பாஜகவினர் இணையத்தில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
Sweet Gesture from Our Lovable PM Shri. @narendramodi, Received and Acknowledged the Lord Jagannath painting from a small girl at West Bengal. pic.twitter.com/WD7mWv1abN
— Dr.SG Suryah (@SuryahSG) March 2, 2024
15,000 கோடி ரூபாய்: மேற்கு வங்கத்திற்குச் சென்றுள்ள பிரதமர் மோடி பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மின்சாரம், ரயில் மற்றும் சாலை உள்ளிட்ட 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், புருலியா மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூரில் அமைந்துள்ள ரகுநாத்பூர் அனல் மின் நிலையத்தின் இரண்டாம் கட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை அங்கே திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் தான் நேரடி போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த 2019இல் நடந்த லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 22இல் வென்றது. அதேநேரம் பாஜக 18 இடங்களைக் கைப்பற்றியது. 2014 தேர்தலை விட பாஜக 16 இடங்கள் கூடுதலாகக் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications