சனாதனத்தை தூக்கிச் செல்லும் மோடி! பாஜக தலைமையின் பகீர் போஸ்ட்! விளாசியெடுக்கும் நெட்டிசன்கள்!
டெல்லி : பாஜக தேசிய தலைமையகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் 'சனாதனத்தை தூக்கிச் செல்பவர்; என பிரதமர் மோடியின் படத்துடன் ட்வீட் செய்யப்பட்டுள்ளது கடும் சர்ச்சையாகி இருக்கும் நிலையில், பாஜக இன்னும் ஜாதி அமைப்பை தூக்கிக்கொண்டு சுமக்கிறதா என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமானம் தாங்கி போர் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பல் ஆனது சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டுள்ளது இதை அடுத்து விமானம் தாங்கி கப்பலை சொந்தமாக உருவாக்கும் திறன் கொண்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் இணைந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி
ஒரே நேரத்தில் 1500க்கும் மேற்பட்ட வீரர்கள் விமானங்கள் ஹெலிகாப்டர்களை இயக்கவும் தரையிறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஐ எம் எஸ் விக்ராந்த் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது கொச்சி கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு இந்த கப்பலை இந்திய கடற்படையில் இணைத்து வைத்தார்.

பாஜக ட்விட்டர்
இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜினாட் சிங் கேரள முதல்வர் மினராய் விஜயன் கடற்படை முக்கிய தளபதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டது முதல் பேசி முடிக்கும் வரை அனைத்து நிகழ்வுகளையும் பிஜேபி 4 இந்தியா என்ற பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களில் அடுத்தடுத்து வெளியிடப்பட்டது.

சனாதானம்
இந்த நிலையில் தான் விமானம் தாங்கி போர்க்கப்பலை அர்ப்பணிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக பாஜக பகிர்ந்துள்ள ஒரு ட்விட்டானது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. சனாதானத்தை தூக்கி செல்பவர் என்ற அடைமொழியுடன் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு கோவில்கள் மற்றும் மத குருக்களை வணங்குவது போல அமைக்கப்பட்டு இருக்கும் இந்த ட்வீட் தான் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பி இருக்கிறது.

கடும் கண்டனம்
ஜாதியை உருவாக்கியதாக கூறப்படும் சனாதன தர்மத்தை பிரதமர் மோடி தூக்கி பிடிக்கிறார் என்றால் இன்னும் பாஜக சாதி கட்டமைப்புகளை தாங்கிக் கொண்டு இருக்கிறதா என நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பிரதமரா? அல்லது இந்து மதத்துக்கும் மட்டும் பிரதமரா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications