டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அட.. என்ன தீர்ப்பு வந்தால் என்ன.. வழக்கம் போல ஜாலியா, ஒற்றுமையா இருங்க.. நெட்டிசன்கள் டிவீட்ஸ்

தீர்ப்பினை ஒட்டி அமைதி காக்கும்படியான ட்வீட்கள் பதிவாகி வருகின்றன

Google Oneindia Tamil News

Recommended Video

    Ayodhya Case verdict| அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

    டெல்லி: "ஏம்ப்பா.. என்னால பூமியையே கண்டுபிடிக்க முடியல.. அந்த இரண்டரை ஏக்கர் நிலத்தை எங்கேன்னு போய் தேடுவேன்" என்பது முதல்.. "அமைதியை பரப்புங்கள்.. மதநல்லிணக்கத்துக்கு ஒத்துழைப்போம்" என்பது வரை அயோத்தி தீர்ப்பை எதிர்பார்த்து ட்வீட்கள் போடப்பட்டு வருகின்றன.

    அயோத்தி தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது. 2.77 ஏக்கர் நிலத்தை 2 இந்து அமைப்புகளும், ஒரு முஸ்லிம் அமைப்பும் சமமாக பிரித்து கொள்ளுமாறு அலகாபாத் ஐகோர்ட் கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி தீர்ப்பு தந்தது.

    ஆனால் இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட, அதன் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது. தீர்ப்பு முன்னிட்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேசம் முழுவதும் 144 போடப்பட்டுள்ளது. அயோத்தி நகரம் முழுவதும் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

     வேண்டுகோள்

    வேண்டுகோள்

    நாட்டு மக்கள் எல்லோரும் அமைதி காணுங்கள் என்றும், தீர்ப்பு எப்படி வந்தாலும் எதிர்வினையாற்றக்கூடாது என்றும் கட்சி பாகுபாடு இல்லாமல் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், வழக்கம்போல ட்விட்டர்வாசிகள் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

     ஹேஷ்டேக்

    ஹேஷ்டேக்

    இன்று காலை முதல் அயோத்திதான் ஹேஷ்டேக்கில் வைரலாகிறது. தனிப்பட்ட கருத்து முதல், பொது அமைதி வரை எல்லாம் சேர்ந்த கலவையாக #hindumuslimbhaibhai ஹேஷ்டேக்கில் ட்வீட்களை போட்டு குவித்து வருகிறார்கள். அவைகளில் ஒருசிலதான் இவை:

    சம்பந்தமே இல்லை

    "தீர்ப்புக்கும் தமிழகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஆகவே வழக்கம்போல் ஒற்றுமையுடன் இருங்கள்."

    எங்கே 2.77 ஏக்கர் நிலம்?

    என்னால் பூமியைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. 2.77 ஏக்கர் நிலத்தை எங்கே கண்டுபிடிப்பது?
    பணிவாக இரு
    நேர்மறையாக இருங்கள்
    முதிர்ச்சியடைந்திருங்கள்
    நேர்மையாக இரு
    மதத்தை அல்ல, மனிதனை நேசிக்கவும்

    வேண்டுவோம்

    மதநல்லிணக்கம்
    #மனிதநேயம் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
    சர்வம் கிருஷ்ணார்பணம்.
    ஏசு ஆசியோடு
    இன்ஷாஅல்லாஹ்

    பெருமாள்

    மக்கள் மாண்புடன் அமைதியாக தான் இருக்கிறார்கள்.ஊடகங்கள் தான் ஊதி பெரிதாக்க நினைக்கிறது

    English summary
    Ayodhya Ram Mandir-Babri Masjid Case Verdict: #trending hashtag hindumuslimbhaibhai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X