"படுத்து புரண்டு.." இதுவா ஹோலி கொண்டாட்டம்.. டெல்லி மெட்ரோவில் அத்துமீறிய 2 பெண்கள்.. ஷாக்
டெல்லி: ஹோலி பண்டிகை ரீல்ஸ் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், டெல்லி மெட்ரோவில் இரு பெண்கள் அத்துமீறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மெட்ரோ சேவை என்பது ரயிலில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாகவும் சவுகரியமாகவும் செல்ல பயன்படும். ஆனால் டெல்லியில் மட்டும் அத்துடன் சேர்ந்த ரீல்ஸ்கள் எடுக்கவும் ஏற்ற இடமாக மாறியுள்ளது.

இதற்கிடையே ஹோலி பண்டிகையை முன்னிட்டு அது சார்ந்த ரீல்கள் மற்றும் வீடியோக்கள் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த ஹோலி ரீல்ஸ்களில் டெல்லி மெட்ரோ தான் இப்போது ஹாட்ஸ்பாடாக மாறி இருக்கிறது. அதிலும் ஒரு வீடியோ இணையத்தில் இப்போது மிக பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அத்துமீறல்: அந்த வீடியோவில் ஹோலி கொண்டாட்டத்தில் இரண்டு பெண்கள் அத்துமீறும் வகையில் சில செயல்களைச் செய்துள்ளது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில் இரண்டு பெண்கள், மெட்ரோ ரயிலில் அமர்ந்து வண்ணங்களைப் பூசி கொள்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே வண்ணப் பொடியால் மூடப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் பாடலுக்கு மெல்ல டான்ஸ் ஆடியபடியே வண்ணங்களை முகத்தில் பூசிக்கொள்கிறார்கள்.
அப்போது ஒரு கட்டத்தில் முத்தமிடுவது போலவும் மிகவும் நெருக்கமாக இருப்பது போலவும் அவர்கள் செய்கிறார்கள். ஒரு கட்டத்தில் அதில் ஒரு பெண் மற்றொரு பெண் மீது அப்படியே படுத்துக் கொள்வது போலவும் செய்கிறார். பின்னால் அமர்ந்து கொண்டு இருப்போர் இதைப் பார்த்து முகம் சுளிப்பதும் இந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
அநாகரீகம்: பொதுவெளியில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலரும் டெல்லி மெட்ரோ நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "ரயிலில் இதுபோன் அநாகரீக செயல்களைப் பார்த்தும் வேதனைப்படும் சக பயணிகளை நினைத்தால் பாவமாக இருக்கிறது" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
அதேநேரம் மற்றொரு நபர் "டெல்லி மெட்ரோ இப்போது ஓயோ வசதியையும் இலவசமாகத் தருகிறது போலவே.." என்று நக்கலாகப் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர் இது முற்றிலும் "அருவருப்பானது" என்று சாடியுள்ளார். டெல்லி மெட்ரோவில் இதுபோல அத்தமீறுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே பலரும் வலியுறுத்துகிறார்கள். சிலர் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்தால் தான் மற்றவர்கள் இதுபோல செய்ய மாட்டார்கள் என்பதே அவர்கள் கருத்தாகும்.
இந்தச் சம்பவத்திற்கு டெல்லி மெட்ரோ நிர்வாகம் இதுவரை எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை. அதேநேரம் டெல்லி மெட்ரோவில் இதுபோல சம்பவங்கள் நடப்பதும் இது முதல்முறை இல்லை. முன்பு இதுபோன்ற வீடியோக்கள் டிரெண்டாகும் போதெல்லாம் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்ற அறிவிப்பு மட்டுமே டெல்லி மெட்ரோ தரப்பில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications