தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க ஒப்புதல்.. எந்த கதிர்வீச்சு அபாயமும் இல்லை.! மத்திய அரசு
டெல்லி: தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் நாட்டிலேயே முதல் முறையாக தேனி மாவட்டத்தில் தான் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது தேனி பொட்டிபுரத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது
மேலும் நியூட்ரினோ ஆய்வகத்தால் சுற்றுப்புறத்தில் எந்த பாதிப்பும் வராது எனவும் மத்திய அணுசக்தி துறைதகவல் தெரிவித்துள்ளது மேலும் இந்த ஆய்வகத்தால் எந்த கதிர்வீச்சு அபாயமும் ஏற்படாது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது
நாட்டில் முதன் முதலாக 1965ம் ஆண்டு காஸ்மிக் கதிர்களில் இருந்து உண்டாகும் நியூட்ரினோக்கள், கோலார் தங்க வயல் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இச்சுரங்கங்கள் மூடப்பட்டு விட்டன. எனவே மீண்டும் இந்த ஆராய்ச்சியை நடத்த இந்திய நியூட்ரினோ அறிவியற்கூடம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த ஆய்வு மையம் தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள பொட்டிபுரம் எனும் ஊரிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் உள்ளே அமைக்கப்பட உள்ளது. மலையின் உச்சியில் இருந்து 1.3 கி.மீ., கீழே, மலையின் அடிவாரத்தில் 2.5 கி.மீ தூரத்திற்கு சுரங்கம் தோண்டப்பட்டு ஆய்வு கூடம் அமைக்கப்படும்.
பொட்டிப்புரம் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க ஏராளமான கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு மையம் அமைந்தால்குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications