லாரியில் என்ன வித்தியாசமா இருக்கு! ஆனந்த் மகிந்திராவை நெகிழ வைத்த சம்பவம்.. பார்த்ததும் அசந்துட்டாரே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை பலரும் தங்கள் குடும்பத்தில் ஒருவர் போல வளர்ப்பார்கள். சிலர் கார்களிலும் ஏன் பைக்குகளில் கூட கொண்டு செல்வதை பார்த்து இருக்கிறோம். ஆனால் லாரி ஒன்றில் தனியாக கூண்டு அமைத்து லாரி டிரைவர் தான் செல்லும் இடத்திற்கு எல்லாம் அழைத்து செல்லும் வீடியோ ஒன்று கடந்த சில தினங்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் ஆனந்த் மகிந்திரா பகிர்ந்துள்ளார்.

நாடறிந்த தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா. இந்தியாவின் கார் உற்பத்தி, டெக், நிதி என பல துறைகளில் மகிந்திரா நிறுவனம் கோலோச்சி வருகிறது. அதிலும் கார் உற்பத்தியில் இந்தியாவில் தனக்கென தனி மார்க்கெட்டை வைத்துள்ளது இந்த நிறுவனம். மகிந்திரா குழுமங்களின் தலைவராக உள்ள ஆனந்த் மகிந்திரா சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இயங்க கூடியவர்.

anand mahindra weird trend

குறிப்பாக தனது எக்ஸ் தளத்தில் அவ்வப்போது அவர் பதிவிடும் சுவாரசிய கருத்துக்கள் இணையத்தில் அதிகம் டிரெண்ட் ஆகும். தனக்கு பிடித்த ஜோக்குகள், அசாத்திய சாதனைகள், தான் கண்டு வியந்த விஷயங்கள் ஆகியவற்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வருகிறார். இவருக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு என சொல்லும் அளவுக்கு ஆனந்த மகிந்திராவின் பதிவுகள் இணையத்தில் அதிகம் பகிரப்படும்.

ஆனந்த் மகிந்திராவுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான பின் தொடர்பவர்கள் உள்ளனர். சரி அதெல்லாம் இருக்கட்டும்.. இங்கே விஷயத்திற்கு வருவோம்.. ஆனந்த் மகிந்திரா இன்று தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், லாரி ஒன்றில் டீசல் டேங்க் அருகில் இரண்டு கூண்டுகள் அமைக்கப்பட்டு , செல்லப்பிராணியான வளர்ப்பு நாயை அதில் அடைத்து வைத்து கொண்டு செல்கிறார்.

இப்படியாக அந்த லாரி டிரைவர் தான் செல்லும் இடத்திற்கு எல்லாம் நாயையும் அழைத்து சென்று வரும் வகையில், வடிவமைத்து இருக்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஆனந்த் மகிந்திரா, நண்பர்களே! ஒருபோதும் அவர்களை விட்டு விட்டு செல்லாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார். ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவு வேகமாக பரவி வருகிறது.

நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை பார்த்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "இப்படி நாய்களை அழைத்து செல்வது லாரி டிரைவருக்கும் பாதுகாப்பானதுதான். இரவில் பார்க் செய்யும் போது திருடர்கள் வந்து விடுவார்களோ என அச்சப்பட வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு நெட்டிசன் கூறுகையில்,"உண்மையிலேயே இந்த நபரின் செயலை பாராட்ட வேண்டும்.. இன்று இணையத்தில் பார்த்ததிலேயே மிகவும் அன்பான வீடியோ இதுதான் எனக் கூறியுள்ளார். மற்றொரு நெட்டிசன், 'இந்த வீடியோ காட்சிகள் சீனாவில் படம் பிடித்தது போல தெரிகிறது. வாகனத்தில் சீன மொழி போன்று எழுதப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.

வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை பலரும் தங்கள் குடும்பத்தில் ஒருவர் போல வளர்ப்பார்கள். சிலர் கார்களிலும் ஏன் பைக்குகளில் கூட கொண்டு செல்வதை பார்த்து இருக்கிறோம். ஆனால் இப்படி லாரியில் கூண்டு அமைத்துஅழைத்து செல்வதை பார்க்கவே அவ்வளவு அழகாக உள்ளது" என மற்றொரு நெட்டிசன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+